என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Makalir kuzhu Chairman"

    • களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் காளிராஜ். இவரது மனைவி மகேஷ்வரி(வயது 40). இவர்களுக்கு 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.
    • மகேஷ்வரி மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக இருந்து வந்தார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் காளிராஜ். இவரது மனைவி மகேஷ்வரி(வயது 40). இவர்களுக்கு 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.

    காளிராஜ் மற்றும் அவரது 2 மகன்கள் மாற்றுத்திறனாளிகள் ஆவர். மகேஷ்வரி மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக இருந்து வந்தார். இந்நிலையில் அவருக்கும், அவரது மகன்களில் ஒருவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களை மகேஷ்வரியின் தாயார் செல்வக்கனி கவனித்து வந்தார்.

    அதே நேரத்தில் குழுவின் மூலம் வாங்கி கொடுத்த பணத்தை சிலர் கட்டாமல் இருந்ததாகவும், அதனாலும் மகேஷ்வரி மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வீட்டில் தனி அறைக்குள் சென்ற மகேஷ்வரி, தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

    உடனே அக்கம்பக்க த்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகேஷ்வரி பரிதாபமாக இறந்தார். vஇதுகுறித்து களக்காடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அத ன்பேரில் இன்ஸ்பெக்டர் பச்சைமால் வழக்குப்பதிவு செய்து மகேஷ்வரி தற்கொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.

    ×