என் மலர்
நீங்கள் தேடியது "Madurai Girl Murder"
- வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்ததாக உறவினர்கள் புகார் அளித்தனர்.
- கணவர் ரூபன்ராஜ், மாமனார் இலங்கேஸ்வரன், மாமியார் தனபாக்கியம் மீது வழக்குப் பதிவு செய்ப்பட்டுள்ளது.
மதுரை செல்லூரில் வரதட்சணை கொடுமையால் உசிலம்பட்டியைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்கிற பெண் உயிரை மாய்த்துக்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், மணமகன் வீட்டார் மீது புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்ததாக உறவினர்கள் புகார் அளித்தனர். தொடர்ந்து, கணவர் ரூபன்ராஜ், மாமனார் இலங்கேஸ்வரன், மாமியார் தனபாக்கியம் மீது வழக்குப் பதிவு செய்ப்பட்டுள்ளது.
கடந்தாண்டு திருமணத்தின்போது மணமகன் வீட்டார் 300 சவரன் நகை கேட்டபோது பெண் வீட்டார் 150 சவரன் தந்ததாகவும், மீதியை கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிதர்ஷினியின் உடலை பெற மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
- மதுரை அரசு மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர்.
- சம்பவம் தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மதுரை:
மதுரை மாநகராட்சி கூடல்நகர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் 11 வயது சிறுமி. அதே பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் 6 வயதாக இருக்கும் போது உடல்நலக்குறைவால் தாய் இறக்கவே, தந்தை வேறொரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்துகொண்டு ஒதுங்கிவிட்டார். உடன் பிறந்த அண்ணனும் கடந்த ஆண்டு ஆற்றில் மூழ்கி பலியானார்.
பெற்றோர், உடன் பிறந்தவர் என உறவுகளை இழந்த சிறுமிக்கு அவரது பெரியம்மா கைகொடுத்தார். அவர் தனது தங்கை மகளை தன்னுடைய மகளாக தத்தெடுத்து வளர்த்து ஆளாக்கி வந்தார். பெற்றோர் இல்லாத குறை சற்றும் தெரியாத அளவுக்கு அவர் மீது அன்பும், பாசமும் காட்டினார்.
இந்தநிலையில் பள்ளி விடுமுறை காரணமாக நேற்று வீட்டில் இருந்த சிறுமி, குளியல் அறைக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெரியம்மா பலமுறை கதவை தட்டியும் குளியல் அறை கதவு திறக்கப்படவில்லை.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே பார்த்த போது, அங்கு சிறுமி மயங்கிய நிலையில் அசைவற்று கிடந்தார். பதறியடித்துக்கொண்டு அவரை அருகிலுள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றபோது, அவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினர்.
மதுரை அரசு மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இதைக்கேட்டு சிறுமியின் பெரியம்மா தலையில் இடி விழுந்ததுபோல் உணர்ந்தார். பின்னர் இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் சந்தேகம் மரணமாக வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே உயிரிழந்த சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அதன் முடிவில் சிறுமி பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் சிறுமி உயிரிழந்து கிடந்த வீட்டின் குளியல் அறை உள்ளிட்ட இடங்களில் போலீசார் நேரில் ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு கிழிந்த நிலையில் சிறுமியின் ஆடைகள் கிடந்துள்ளது. இதுதொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு புதுச்சேரி மாநிலத்தில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையுண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது மதுரையிலும் சிறுமி கொலை செய்யப்பட்டிருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.






