என் மலர்
நீங்கள் தேடியது "Lumber Store fire"
வத்தலக்குண்டு:
சென்னையை சேர்ந்தவர் ரமேஷ். இவர் வத்தலக்குண்டு அருகே சேவுகம்பட்டி 8-வது வார்டு பகுதியில் மரக்கடை வைத்துள்ளார். இங்கு கேரளாவை சேர்ந்த நியாஸ் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
10-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் வேலை பார்க்கின்றனர். வழக்கம்போல் வேலை முடிந்ததும் கடையை பூட்டியுள்ளனர். அப்போது உள்ளே இருந்து புகை கிளம்பியுள்ளது. சிறிது நேரத்தில் தீப்பற்றி வேகமாக பரவியது.
அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடிய வில்லை. இதுகுறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட அலுவலர் சந்திரகுமார் தலைமையில் நிலைய அலுவலர்கள் கணேசன்(வத்தலக்குண்டு), ஜோசப்(நிலக்கோட்டை), சக்திவேல்(திண்டுக்கல்) மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
விடிய விடிய பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். இருந்தபோதும் பெரும்பாலான பொருட்கள் எரிந்து நாசமானது. ரமேஷ் சென்னையில் இருந்து வந்தபிறகுதான் சேத மதிப்பு குறித்து தெரியவரும். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என விசாரணை நடத்தி வருகின்றனர்.