என் மலர்
நீங்கள் தேடியது "lorry diesel"
கிருஷ்ணகிரி அருகே லாரியில் இருந்து டீசல் திருடியவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 35 லிட்டர் டீசலை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 23). லாரி டிரைவரான இவர் சம்பவத்தன்று லாரியை கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டி சென்றார். அப்போது சுண்டம்பட்டி என்ற இடத்தில் உள்ள ஓட்டலில் சாப்பிடுவதற்காக ரோட்டோரம் லாரியை நிறுத்தி விட்டு சென்றார். அப்போது அங்கு ஒரு வாலிபர் லாரியில் டீசல் திருடினார்.
இதனை கண்ட சக்கரவர்த்தி பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்து கந்திகுப்பம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அந்த நபரிடம் விசாரித்ததில் அவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கோபிகவுடா என்பதும், லாரி டிரைவர் என்பதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து லாரியில் இருந்து திருடப்பட்ட 35 லிட்டர் டீசலை பறிமுதல் செய்து கோபிகவுடாவை போலீசார் கைது செய்தனர்.






