search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Link Aadhaar Number"

    • மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்க தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
    • மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நவம்பரில் தொடங்கியது.

    திருப்பூர் :

    வீடு, விசைத்தறி, குடிசை, கைத்தறி, விவசாயம்ஆகிய 5 வகை மின் இணைப்புகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இந்த மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்க தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

    கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மண்டலத்தில் 25 லட்சத்து 88 ஆயிரத்து 195 மானிய வகை மின் இணைப்புகள் உள்ளன.மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நவம்பரில் தொடங்கியது. 2முறை அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் நாளை 15ந்தேதியுடன் அவகாசம் முடிவடைகிறது. இன்னும் இரு நாட்களே மீதியுள்ள நிலையில் இதுவரை இணைக்காதவர்கள் ஆன்லைன் வாயிலாகவோ, மின் வாரிய அலுவலகங்களிலோ உடனடியாக இணைக்க, மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    • இத்திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் தற்பொழுது 7,953 விவசாயிகள், தனது பயன்பாட்டிலுள்ள வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் விவரங்களை இணைக்க வில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    • மேலும் அஞ்சல் அலுவலங்களில் வங்கி கணக்கு தொடங்கும் பொழுது 48 மணி நேரத்திற்குள் ஆதார் விவரங்கள் சரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:-

    பிரதம மந்திரி கிஷான் கவுரவ நிதி திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் வாங்குதல் மற்றும் வேளாண்மை தொடர்பான செல வினங்கள் மேற்கொள்ள ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் தற்பொழுது 7,953 விவசாயிகள், தனது பயன்பாட்டிலுள்ள வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் விவரங்களை இணைக்க

    வில்லை என தெரி விக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆதார் விவரங்களை வங்கி கணக்குடன் இணைக்காத பயனாளிகளுக்கு பி.எம்.கிசான் திட்டத்தின் 13-வது தவணை தொகை விடுவிக்கப்பட இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே ஆதார் விவரங்களை வங்கி கணக்கு

    எண்ணுடன் இணைக்காத மேற்காணும் விவசாயிகள் 13-வது தவணைத் தொகை

    யினை தொடர்ந்து பெறு வதற்கு உடனடியாக வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் விவரங்களை இணைத்தி டவும், இல்லையெனில் அருகிலுள்ள அஞ்சல் அலுவலகங்களில் பூஜ்ஜியம் தொகையில் வங்கி கணக்கு தொடங்கிடவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் அஞ்சல் அலுவலங்களில் வங்கி கணக்கு தொடங்கும் பொழுது 48 மணி நேரத்திற்குள் ஆதார் விவரங்கள் சரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி விவசாயிகள் அஞ்சல் அலுவலகங்களில் பூஜ்ஜியம் தொகையில் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். 

    ×