search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Learning Disability"

    • திட்ட மூலம் தினமும் ஒரு மணி நேரம் பள்ளியில் கற்றல் குறைபாடு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
    • இணைய வழியில் வெளிநாட்டு பள்ளிகளுக்கு ஈடான வகையில் பாடங்கள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கூட்டுறவு காலனியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் கற்றல் குறைபாடு உடைய மாணவ- மாணவிகளுக்கு பிளிங்க் அறக்கட்டளை மற்றும் மைக்ரோசாப்ட் இணைந்து சிறப்பு பயிற்சி மற்றும் ஆங்கில மொழி மேம்பாட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

    இன்று இந்த திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்றார். மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம்பூபதி முன்னிலை வகித்தார்.

    மேயர் சண்.ராமநாதன் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் கூறும்போது, தமிழ்நாடு முதல்-அமைச்சர் வழிகாட்டுதலின்படி இன்று தஞ்சை மாநகராட்சிகளில் நான்கு பள்ளிகளில் கற்றல் குறைபாடு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி, ஆங்கில மொழி மேம்பாட்டு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலே தஞ்சாவூர் மாநகராட்சி தான் முதன் முதலில் இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் தஞ்சை மாநகராட்சியில் 17 பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் .

    இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் நம்பர் ஒன் மாநிலம் என்றார்.

    இந்தத் திட்ட மூலம் தினமும் ஒரு மணி நேரம் பள்ளியில் கற்றல் குறைபாடு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இணைய வழியில் வெளிநாட்டு பள்ளிகளுக்கு ஈடான வகையில் பாடங்கள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.

    இன்று இந்த திட்டம் மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்கப்பட்டது.

    இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமே கற்றல் குறைபாடுகள் உள்ள குழந்தைகளை அடையாளம் கண்டு கற்றல் சவால்களை சமாளிக்க அவர்களுக்கு உதவி அளிப்பதாகும்.

    மேலும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி விழிப்புணர்வை ஏற்படுத்துதல், முழுமையான ஸ்கிரீனிங் செயல் முறையை செயல்படுத்துதல் ஆகியவை முக்கிய செயல்பாடுகளில் அடங்கும்.

    சிறப்பு பயிற்சி பெற்ற சிறப்பாசிரியர்கள் வாசிப்பு, எழுதுதல், புரிந்து கொள்ளும் திறன்களை மேம்படுத்த ஆன்லைன் வகுப்புகளை நடத்துவர்.

    குழந்தைகளின் அத்தியாவசிய திறன்களை வளர்த்துக் கொள்ளவும், கல்வி வெற்றியை அடையவும் உதவும் உள்ளடக்கிய மற்றும் வளர்க்கும் சூழலை உருவாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.

    இந்த நிகழ்ச்சியில் பிளிங்க் அறக்கட்டளை நிறுவனர் அருண் பெர்னாண்டஸ் பேசும்போது, கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகள் மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த மைக்ரோசாப்டின் ஆதரவுக்கு நன்றி என்றார்.

    பிளிங்க் பவுண்டேஷன் திட்ட மேலாளர் மகாலட்சுமி கூறும் போது, இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்க தொடர்ந்து உறுதுணையாக இருந்த மேயர், துணை மேயர், ஆணையர் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நன்றி என்றார்.

    இதே போல் பள்ளியக்ரஹாரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, புதுப்பட்டிணம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, நீலகிரி மாநகராட்சி தொடக்கப்பள்ளி ஆகியவற்றிலும் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பிளிங்க் பவுண்டேஷன் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீநாத், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை மணிமேகலை நன்றி கூறினார்.

    ×