search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Language teachers"

    • பள்ளி இடை நிற்றல் அதிகரிக்கும் நிலை காணப்படுகிறது.
    • இடை நிற்றல் மாணவர்கள் கண்டறிந்து பள்ளியில் சேர்க்கப்படுவர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றல் அதிகரிக்கும் நிலை காணப்படுகிறது. குடும்பச்சூழல், கற்றலில் ஆர்வ மின்மை, பொதுத்தேர்வுகளில் தோல்வி போன்ற காரணங்களால் பள்ளி இடை நிற்றல் அதிகரிக்கும் நிலை காணப்படுகிறது. இதுகுறித்து காரணங்களை ஆராய்ந்து, தீர்வு காணும் விதமான நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு மேயர் தினேஷ் குமார் தலைமை வகித்தார். துணை மேயர் பாலசுப்ரமணியம், கமிஷனர் பவன்குமார் முன்னிலை வகித்தனர். கல்வித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டம் குறித்து மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:- தொழில் நகரமாக உள்ளதால் திருப்பூரில் அதிக அளவு வெளி மாவட்ட, வெளி மாநிலத்தினர் அதிகம் வசிக்கின்றனர். குடும்பச்சூழல் காரணமாக பள்ளிகளில் சேர்க்க முடியாமல் எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தவிக்கும் நிலை உள்ளது. இது குறித்து கணக்கெடுப்பு மேற்கொண்டு இது போல் இடை நிற்றல் மாணவர்கள் கண்டறிந்து பள்ளியில் சேர்க்கப்படுவர்.

    பல மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு பின் கல்வியைத் தொடர்வது தவிர்க்கும் நிலை உள்ளது. இவர்கள் பயனடையும் விதமாக வடக்கு பகுதியில் அரசு ஐ.டி.ஐ., துவங்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும். குறுகிய கால தொழிற்பயிற்சிகள் வழங்கி சுய வேலை வாய்ப்பு, திறன் மேம்பாடு பயிற்சி அளிக்கப்படும்.வெளி மாநில குழந்தைகள் படிக்கும் விதமாக பிற மொழி ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். ஆத்துப்பாளையம், வெங்கமேடு பகுதியில் 84 வெளி மாநில குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்கள் தாய் மொழி பயிலும் வகையில் சிறப்பு ஊதியத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இது போல் மற்ற பகுதிகளிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

    ×