search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "laborer lost"

    • 77 பவுன் தங்க நகையுடன் தொழிலாளி மாயமானார்.
    • செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    கோவை, ஜன.29-

    கோவை ஆர்.எஸ்.புரம் மேற்கு பொன்னுரங்கம் ரோட்டை சேர்ந்தவர் பியூஸ் ஜெயின் (வயது 35). இவர் ஸ்ரீனிவாச ராகவ ரோட்டில் நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.

    இவரது நகை பட்டறையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த சதாம் உசேன் என்பவர் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். பியூஸ் ஜெயின் அவரது நகை பட்டறையில் உள்ள நகைகளை லேசர் சாலிடரிங் செய்வதற்கு அருகில் உள்ள நகை கடையில் கொடுப்பது வழக்கம்.

    அதனை சதாம் உசேன் கொண்டு சென்று வருவார்.சம்பவத்தன்று வழக்கம் போல சதாம் உசேனிடம் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 621.660 கிராம் எடையுடைய பிரேஸ்லெட், கம்மல் உள்ளிட்ட நகைகளை சதாம் உசேனிடம் கொடுத்து லேசர் சாலிடரிங் செய்து வருமாறு அனுப்பினார்.

    ஆனால் நகையுடன் சென்ற சதாம் உசேன் வெகு நேரமாகியும் திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பியூஸ் ஜெயின் அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    பின்னர் அக்கம் பக்கத்தில் அவரை தேடி பார்த்தார். ஆனால் சதாம் உசேன் எங்கும் கிடைக்கவில்லை. அவர் ரூ.25 லட்சம் தங்க நகைகளுடன் மாயமாகி விட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து பியூஸ் ஜெயின் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையுடன் மாயமான சதாம் உசேனை தேடி வருகின்றனர்.

    77 பவுன் தங்க நகையுடன் வடமாநில தொழிலாளி மாயமான சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    ×