search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Knife Festival"

    • திருமஞ்சன பொடியை வைத்தால் 3 நாட்களில் காயம் சரியாகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கத்தி போடும் திருவிழாவை பார்த்து பரவசமடைந்தனர்.

    கோவை,

    கோவை டவுன்ஹால் பகுதியில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் விஜயதசமி நாளில் அம்மனை அழைப்பதற்காக இந்தக் கோவிலுக்கு வரும் மக்கள் கத்திபோடும் திருவிழா நடந்து வருகின்றனர்.

    கோவை பூ மார்க்கெட்டில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் இன்று காலை இந்த கத்தி போடும் திருவிழா ஊர்வலம் தொடங்கியது. இதில் கோவை மாவட்டம் முழுவதும் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் வேசுக்கோ, தீசுக்கோ என்று பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் கத்தியால் கைகளில் வெட்டிக் கொண்டே அம்மனை அழைத்தனர்.

    இதனால் அந்த பக்தர்களின் உடலில் ரத்தம் வழிந்து ஓடியது அந்த வெட்டுக் காயங்களின் மீது திருமஞ்சனப் பொடியை வைத்துக் கொண்டு, ஆடிக்கொண்டே சென்றனர். இந்த திருமஞ்சன பொடியை வைத்தால் 3 நாட்களில் காயம் சரியாகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஊர்வலமானது முக்கிய வீதிகள் வழியாக வந்து, டவுன்ஹாலில் உள்ள சவுடேஸ்வரி கோவிலை வந்தடைந்தது.

    தொடர்ந்து அம்மனுக்கு விசேஷ பூஜை, திருக்கல்யாணமும் நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கத்தி போடும் திருவிழாவை பார்த்து பரவசமடைந்தனர்.

    ×