search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KM Mani death"

    கேரள காங்கிரஸ் (மாணி) கட்சி தலைவரான கே.எம்.மாணியில் உடல் நாளை சொந்த ஊரில் அடக்கம் செய்யப்படுகிறது. அவரது மறைவிற்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி, ராகுல்காந்தி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளனர். #KMMani #RIPKMMani
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம் பாலா என்ற இடத்தை சேர்ந்தவர் கே.எம்.மாணி (வயது 86). கேரள காங்கிரஸ் (மாணி) கட்சி தலைவரான அவர் மூச்சுதிணறல் காரணமாக கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    மாணி மரணமடைந்த தகவல் கிடைத்ததும் ஆஸ்பத்திரிக்கு சென்று அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

    கே.எம்.மாணியின் உடல் இன்று காலை சொந்த ஊரான கோட்டயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். நாளை (11-ந்தேதி) பிற்பகல் அவரது உடல் அடக்கம் நடைபெறுகிறது.

    மாணியின் மகன் ஜோஸ் கே.மாணியும், தந்தை வழியில் அரசியலில் குதித்து உள்ளார். அவர் தற்போது எம்.பி.யாக உள்ளார்.

    ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்த மாணி பின்னர் கேரள காங்கிரஸ் (மாணி) என்ற புதிய கட்சியை தொடங்கி அதன் தலைவராக செயல்பட்டு வந்தார்.



    வக்கீலாக தனது வாழ்க்கையை தொடங்கிய மாணி 1960-ம் ஆண்டு அரசியலில் குதித்தார். இந்திய தேசிய காங்கிரசில் இணைந்த அவர் கோட்டயம் மாவட்ட காங்கிரஸ் செயலாளராக 1964-ம் ஆண்டு வரை பணியாற்றினார்.

    1965-ம் ஆண்டு முதல் முறையாக பாலா சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்தெடுக்கப்பட்டார் தொடர்ந்து 53 ஆண்டுகள் இதே தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமை கே.எம்.மாணிக்கு மட்டுமே உண்டு.

    நிதி மந்திரியாக கே.எம். மாணி இருந்தபோது 13 முறை பட்ஜெட் தாக்கல் செய்து அதிலும் சாதனை படைத்தார்.  #KMMani #RIPKMMani
    ×