search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kisan samman scheme"

    • விவசாயிகள் உடனடியாக தங்களது பதிவுகளை புதுப்பிக்க வேண்டியது அவசியம்.
    • புதுப்பிக்க தவறியவர்களுக்கு நிதி வழங்குவது நிறுத்தி வைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    விளாத்திகுளம்:

    புதூர் வேளாண்மை உதவி இயக்குநர் சின்னகண்ணு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் தங்கள் வங்கி கணக்கில் பெற்று வரும் விவசாயிகள் உடனடியாக தங்களது பதிவுகளை புதுப்பிக்க வேண்டியது அவசியம். தங்கள் பதிவினை புதுப்பித்தல் மூலம் தாங்கள் தொடர்ந்து இந்த நிதியை பெற இயலும்.

    புதுப்பிக்க தவறியவர்களுக்கு நிதி வழங்குவது நிறுத்தி வைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் தங்களது பதிவினை புதுப்பிக்க ஆதார் எண், ஏற்கெனவே பதிவு செய்த செல்போன் எண் எடுத்துச் சென்று அங்கிகரிக்கப்பட்ட பொது சேவை மையங்கள் அல்லது அஞ்சல் அலுவலகங்களில் இ.கே.ஒய்.சி மூலம் புதுப்பித்துக் கொள்ளலாம்.

    விவசாயிகளுக்கு 13-வது தவணை டிசம்பர் மாதம் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளதால் டிசம்பர் முதல் வாரத்திற்குள் விவசாயிகள் தங்களது பதிவினை புதுப்பித்தல் அவசியம்.மேலும் விவரங்களுக்கு புதூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×