என் மலர்
நீங்கள் தேடியது "Khadi products"
- 2022-23ம் நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக ரூ.1,34,630 கோடியாக அதிகரித்துள்ளது.
- கைவினைக்கலைஞர்களின் அயராத கடின உழைப்பினால் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது.
புதுடெல்லி :
பிரதமர் நரேந்திரமோடி தலைமையின் கீழ் 'தற்சார்பு இந்தியா திட்டத்தை' புதிய உயரத்திற்குகொண்டு செல்லும் வகையில் காதி மற்றும் கிராமத்தொழில்கள் ஆணையம் வலுவான இந்தியாவின் தோற்றத்தை உலக நாடுகள் முன் வைத்துள்ளது. 2013-14ம் நிதியாண்டில் ரூ.31,154 கோடியாக இருந்த இந்த ஆணைய பொருட்களின் விற்பனை 2022-23ம் நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக ரூ.1,34,630 கோடியாக அதிகரித்துள்ளது. பிரதமர் நரேந்திரமோடி மற்றும் நாட்டின் கடைகோடி கிராமங்களில் உள்ள கைவினைக்கலைஞர்களின் அயராத கடின உழைப்பினால் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது என்று ஆணையத்தின் தலைவர் மனோஜ் குமார் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறும் போது, நிதியாண்டு 2013-14ம் ஆண்டு முதல் 2022-23ம் ஆண்டு வரை காதி மற்றும் கிராமத் தொழில் துறை பொருட்களின் உற்பத்தி 268 சதவீதம் அதிகரித்ததோடு 332 சதவீதமாக விற்பனை உயர்ந்தது. மோடி அரசின் 9 ஆண்டுகால ஆட்சியில், காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் 9 சாதனைகளை படைத்துள்ளது. 2013-14ல் ரூ..26,109 கோடியாக இருந்த காதி மற்றும் கிராமத்தொழில் துறை பொருட்களின் உற்பத்தி, நிதியாண்டு 2022-23ல் 268 சதவீதமாக அதிகரித்து ரூ.95,957 கோடியாக பதிவானது.காதி மற்றும் கிராம தொழில்துறை பொருட்களின் விற்பனையில் மிகப்பெரிய ஏற்றம் 2013-14ம் நிதியாண்டில் ரூ. 31,154 கோடியாக இருந்த விற்பனை, முன் எப்போ தும் இல்லாத வகையில் 332 சதவீதம் அதிகரித்து 2022-23ம் நிதியாண்டில் ரூ.1,34,630 கோடியாக அதிகரித்தது.
காதி துணிகளின் உற்பத்தியில் 2013-14ல்ரூ.811 கோடியாக இருந்த காதி ஆடைகளின் உற்பத்தி, நிதியாண்டு 2022-23ல் 260 சதவீதம் அதிகரித்து ரூ. 2916 கோடியை எட்டியது. காதி துணிகளின் விற்பனையில் நிதியாண்டு 2013 -14ல் ரூ. 1081 கோடியாக இருந்த இவற்றின் விற்பனை, நிதியாண்டு 2022-23ல் 450 சதவீதம் உயர்ந்து ரூ. 5943 கோடியை பதிவு செய்தது. ஊரகப்பகுதிகளில் அதிகபட்ச வேலைவாய்ப்புகளை உருவாக்குவது தான், காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தின் பிரதான நோக்கம்.
இந்தத் துறைகளிலும் ஆணையம் கடந்த 9 ஆண்டுகளில் புதிய சாதனையை படைக்க தவறவில்லை. நிதியாண்டு 2013-14ல் 130,38,444ஆக இருந்த ஒட்டு மொத்த வேலைவாய்ப்பு நிதியாண்டு 2022-23ல் 36 சதவீதம் அதிக ரித்து 177, 16,288 என்ற எண்ணிக்கையை பதிவு செய்தது. அதேபோல நிதியாண்டு 2013-1 4 ல் 5,62,521 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்ட நிலையில், நிதியாண்டு 2022-23ல் இந்த எண்ணிக்கை 70 சதவீதம் அதிகரித்து 9,54,899 ஆக இருந்தது.
காதி கைவினைக்கலைஞர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. நிதியாண்டு 2013-14 முதல் அவர்களது ஊதியம் சுமார் 150 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏப்ரல் 1, 2023 முதல் காதி கைவினைக் கலைஞர்களின் ஊதியம்மேலும் 33 சதவீதம் கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளது.பிரதமரின்கோரிக்கையை ஏற்று காதி ஆர்வலர்கள் ஒரே நாளில் ரூ. 1.34 கோடி மதிப்பிலான பொருட்களை வாங்கியது மிகப்பெரிய சாதனை.
பிரதமர்நரேந்திரமோடியின் சுதேசி திட்டத்தில் நாட்டின் இளைஞர்களை ஈடுபடுத்தி பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம் புதிய சாதனையை படைத்துள்ளது. வேலைதேடுபவராக இல்லாமல் வேலை வழங்குபவராக மாறுதல் என்ற பிரதமரின் கனவை இந்த திட்டம் நிறைவேற்றுகிறது. இந்த நிதியாண்டில் 8.69 லட்சம் புதிய திட்டங்கள்உருவாக்கப்பட்டு அதன் மூலம் மொத்தம் 73.67 லட்சம்பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 9 கிராமத்தொழில்கள்மேம்பாட்டு திட்டத்தில் தேன் இயக்கம் திட்டத்தின் கீழ் 19118 பயனாளிகளுக்கு 1,89,989 லட்சம் தேனீ வளர்ப்பு உப கரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல 'குயவர் மேம்பாட்டுத்திட்டத்தின்' வாயிலாக இதுவரை சுமார் 25,000 குயவர்களுக்கு மின்சாரத்தில் இயங்கும் நவீன
காந்தி ஜெயந்தி இன்று கொண்டாடப்படும் நிலையில், இது தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி நேற்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
நாம் நேசிக்கும் தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் தொடக்கத்தை இன்று நாம் காண்கிறோம். சமத்துவம், கண்ணியம் மற்றும் அதிகாரமளித்தல் போன்றவற்றை நேசிக்கும் உலகில் உள்ள லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக அவர் தொடர்ந்து இருந்து வருகிறார். மனித சமுதாயத்தில் அவர் விட்டுச்சென்ற தாக்கம் ஒற்றுமையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவை எண்ணம், எழுத்து, சிந்தனை மற்றும் செயலால் ஒருங்கிணைத்தவர் மகாத்மா காந்தி. சர்தார் வல்லபாய் பட்டேல் கூறியது போல, இந்தியா ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடு. நமது நாட்டைப் போன்று பன்முகத்தன்மை கொண்ட வேறு எந்த நாடும் உலகில் இல்லை. ஒருவர் அனைவரையும் ஒற்றுமையோடு இருக்கச் செய்தது, கருத்து வேறுபாடுகளை மறந்து, எழுச்சி பெறச் செய்தது, காலனி ஆதிக்கத்திற்கு எதிராக போராடியது, இந்தியாவின் நிலையை உலக அரங்கில் மேம்படச் செய்தது என்றால் அது மகாத்மா காந்தியே.
இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதில், கட்டுப்பாட்டுடனும், இரக்க உணர்வுடனும் இருக்க வேண்டியதை அவர் வலியுறுத்தியதோடு, இதை செயல்படுத்தியதில் உதாரணமாகவும் திகழ்ந்தார்.
தன்னுடைய கழிவறையை அவரே சுத்தம் செய்ததோடு, சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருப்பதை உறுதி செய்தார். குறைந்த அளவு நீரே வீணாவதை உறுதி செய்த அவர், ஆமதாபாத்தில் இருக்கும்போது, சபர்மதியில் அசுத்தமான நீர், சுத்தமான நீரோடு கலக்காமல் இருப்பதை உறுதிசெய்ய அதிக முயற்சி எடுத்தார்.
மகாத்மா காந்தி எழுதிய ஒரு சிறிய விரிவான ஆவணம் ஒன்று சில காலத்திற்கு முன்னர் எனது கவனத்தை ஈர்த்தது. 1941-ம் ஆண்டு மகாத்மா காந்தி “ஆக்கப்பூர்வமான திட்டம்: அதன் பொருள் மற்றும் இடம்” என்ற ஆவணத்தை எழுதினார்.
“ஆக்கப்பூர்வமான திட்டம்” ஆவணத்தில் உள்ள பல அத்தியாயங்கள் இன்றைக்கும் மிகவும் பொருத்தமாக உள்ளன என்பதோடு, 70 ஆண்டுகளுக்கு முன்னதாக, மகாத்மா காந்தி எழுப்பிய, நிறைவேற்றப்படாமல் இருந்த இந்த முக்கியமான அம்சங்களை தற்போது மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது.
திருவிழா காலம் இங்கு துவங்கவுள்ளதால், நாடு முழுவதும் உள்ள மக்கள் புதிய ஆடைகள், பரிசுப் பொருட்கள், உணவு வகைகள் மற்றும் பல பொருட்களை வாங்குவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். இவற்றைச் செய்யும்போது, மகாத்மா காந்தி விட்டுச்சென்ற அடையாளங்களான சிந்தனைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நமது செயல், நமது சகநாட்டு மக்களின் வாழ்க்கையில் வளமான விளக்கை ஏற்றிவைக்க முடியுமா? என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
காதிப் பொருட்களோ அல்லது பரிசுப் பொருட்களோ அல்லது உணவுப் பொருட்களோ, நமது மக்கள் தயாரிக்கும் இந்தப் பொருட்களை நாம் வாங்கினால், நமது சகநாட்டு மக்களின் சிறந்த வாழ்வுக்கு உதவுவதாக இருக்க முடியும்.
கடந்த 4 ஆண்டுகளாக நாட்டில் உள்ள 130 கோடி இந்தியர்கள் தூய்மை இந்தியா இயக்கத்தின் மூலம், தேசப்பிதா மகாத்மா காந்திக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஒவ்வொரு இந்தியரின் கடினமான உழைப்பால் தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கி, இன்று 4 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. இதுவொரு பேரியக்கமாக உருவாகி சாதனை படைத்துள்ளது. முதல்முறையாக, 8½ கோடி வீடுகள், கழிப்பிட வசதி பெற்றுள்ளது. 40 கோடி இந்தியர்கள் திறந்தவெளியில் தங்களது இயற்கை உபாதைகளை கழிக்கச் செல்லும் சூழ்நிலை முடிவுக்கு வந்துள்ளது.
நாட்டில் 39 சதவீதமாக இருந்த சுகாதார வசதிகள், இந்த 4 ஆண்டு காலத்தில் 95 சதவீதமாக அதிகரித்துள்ளது. 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் 4½ லட்சம் கிராமங்களில் தற்போது மக்கள் திறந்தவெளியில் இயற்கை உபாதைகளுக்குச் செல்லும் நிலை இல்லை. தூய்மை இந்தியா இயக்கம், நாட்டின் கண்ணியத்திற்கும், சிறந்த எதிர்காலத்திற்குமானது. இது, நாட்டில் உள்ள லட்சக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகளின் நன்மைக்கான இயக்கம். அதிகாலையில், இயற்கை கடன்களைக் கழிக்கச் செல்லும் பெண்கள், தங்களது முகங்களை மூடிக்கொண்டு இன்னலுக்கு ஆளான நிலை மற்றும் போதுமான சுகாதார வசதி இல்லாமல், நமது குழந்தைகள் பல நோய்த் தொற்றுக்கு ஆளான நிலை போன்றவற்றுக்கு தூய்மை இந்தியா இயக்கம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
சில தினங்களுக்கு முன்னர், ராஜஸ்தானில் இருந்து மாற்றுத்திறனாளி சகோதரர் ஒருவர் என்னோடு, ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசினார். இரு கண்களாலும் பார்க்க இயலாத அவர், தான் சொந்தமாக கழிப்பிடம் வைத்திருப்பது தனது வாழ்க்கையில் எப்படி மிகவும் சாதகமான வேறுபாடுகளை ஏற்படுத்தியது என்று விவரித்தார். திறந்தவெளியில் இயற்கை உபாதைகளுக்காக செல்லும் பல மாற்றுத்திறனாளி சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால், இக்கட்டான நிலையில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளனர். அந்த சகோதரரிடம் இருந்து நான் பெற்ற வாழ்த்துகள் எனது நினைவில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
இந்தியாவில் தற்போதுள்ள பெரும்பாலான மக்கள் சுதந்திரப் போராட்டத்தில் அங்கம் வகிக்காதவர்களாக இருந்திருக்கக் கூடும். ஆனால் தற்போது நாட்டுக்காக நாம் கண்டிப்பாக வாழ வேண்டும். நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் எண்ணப்படி, இந்தியாவை உருவாக்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்.
இன்று தேசப்பிதா மகாத்மா காந்தியின் கனவை நனவாக்க நமக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. காந்தியடிகள் கண்ட கனவை நனவாக்க, குறிப்பிடத்தக்க பங்கு பணிகளை நாம் செய்துள்ளோம். வரும் நாட்களில், இன்னமும் அதிகமாக பங்கு பணிகளை நாம் செய்வோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்த பிரபலமான பாசுரம் இது. “மற்றவர்களின் வலியை உணர்ந்துகொள்ளும் ஆன்மாவே சிறந்தது” என்பதே இதன் பொருள். இந்த மனநிலையே மகாத்மா காந்தியை மற்றவர்களுக்காக வாழச் செய்தது. இன்று, நாம் இந்த 130 கோடி இந்தியர்கள், நாட்டுக்காக மகாத்மா காந்தி கண்ட கனவுகளை நிறைவேற்ற இணைந்து பாடுபட உறுதியேற்றுக்கொள்வோம்.
இவ்வாறு பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார். #NarendraModi #Khadi






