என் மலர்
நீங்கள் தேடியது "Karuppasami Temple"
- மாளிகைப்பாறை கருப்பசாமி கோவிலில் மாதாந்திர பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது.
- கருப்பசாமி, பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அலங்காரம் தீபாரதனை நடந்தது.
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே உள்ள புளியறை வழிகாட்டும் மாளிகைப்பாறை கருப்பசாமி கோவிலில் மாதாந்திர பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது.
விழாவில் கருப்பசாமி மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அலங்காரம் தீபாரதனை நடந்தது. அதனைத்தொடா்ந்து அன்னதானம் நடந்தது.
விழா ஏற்பாடுகள் ஸ்ரீராமஜெயம் அறக்கட்டளையின் சார்பில் செய்யப்பட்டிருந்தது. விழாவில் தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.






