search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "karunanidhi health problem"

    திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்த தகவலால் கடலூரில் அரசு பஸ் மீது கல்வீசி தாக்கப்பட்டது. #karunanidhi #dmk

    கடலூர்:

    உடல்நலம் பாதிக்கப்பட்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு அவருடைய உடல் நிலையில் திடீரென பின்னடைவு ஏற்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் நேற்று இரவு கடலூர் பஸ்நிலையத்தில் இருந்து பண்ருட்டிக்கு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. கோண்டூர் அருகே சென்றபோது திடீரென மர்ம மனிதர்கள் சிலர் அந்த பஸ் மீது கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது.

    பின்னர் அந்த பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் மாற்று பஸ் மூலம் அனுப்பி வைக்கபட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து பஸ் டிரைவர் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். பஸ்கண்ணாடியை உடைத்து விட்டு தப்பி ஓடிய மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து கடலூரில் அரசு பஸ்கள் அனைத்தையும் பணிமனைக்குள் நிறுத்தி வைக்க போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    இதையடுத்து அரசு பஸ்கள் அனைத்தையும் டிரைவர்கள் பணிமனையில் கொண்டு வந்து நிறுத்தினர்.

    அதேபோல் பயணிகளை ஏற்றி கொண்டு சென்ற பஸ்களும் பாதி வழியிலேயே திரும்பி வந்தன. கடலூர் பஸ்நிலையத்தில் இருந்து சென்னைக்கு சென்றுகொண்டிருந்த பஸ் கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடி அருகே சென்றபோது திரும்பி மீண்டும் கடலூர் பஸ் நிலையத்துக்கு வந்தது.

    அப்பாது பஸ்சில் இருந்து இறங்கிய பயணிகள் தங்களது பயண கட்டணத்தை திரும்ப தரக்கோரி கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்தனர்.

    இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த திருப்பாதிரிப்புலியூர் சப்-இன்ஸ்பெக்டர் பரணீதரன் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் பேசி பயணிகளுக்கு பயண கட்டணத்தை திருப்பி கொடுக்கும்படி கூறினார். பயணிகளுக்கு கட்டணம் திருப்பி கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதேபோல் விழுப்புரம் மாவட்டத்திலும் நேற்று இரவு பதட்டமான சூழ்நிலை நிலவியது. உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் குவிந்தனர். பின்னர் அவர்கள் அந்த வழியாக வந்த பஸ்களை மறித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் டிரைவர்கள், வந்த வழியிலேயே பஸ்களை எடுத்து சென்றனர். பஸ்சுக்காக பஸ் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

    இதுகுறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தி.மு.க.வினரை சமாதானப்படுத்தினர். இதனால் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    நேற்று இரவு உளுந்தூர் பேட்டை சுங்கச்சாவடிக்கு சென்ற போலீசார் அங்கு பணியில் இருந்த ஊழியர்களின் பாதுகாப்பு கருதி சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்களுக்கு தடுப்பு கட்டை இல்லாமல் திறந்து வைக்கப்பட்டது.

    நேற்று இரவில் இருந்தே அனைத்து வாகனங்களுக் கும் கட்டணம் வசூலிக்கப்படாமல் செல்கின்றன.

    இதேபோல் திருவெண்ணைநல்லூர் பகுதியிலும் தி.மு.க.வினர் சிறிது நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடபட்டி ருந்தது. பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீசார் குவிக்கபட்டிருந்தனர். #karunanidhi #dmk

    கருணாநிதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிசிச் பெற்று வருகிறார். இந்த அதிர்ச்சியை தாங்க முடியாமல் ஈரோடு மாவட்டத்தில் 2 பேர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளனர். #karunanidhi #dmk

    ஈரோடு:

    தி.மு.க தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    தி.மு.க தொண்டர்கள் கருணாநிதி உடல் நலம் பெற வேண்டி கொண்டிருக்கிறார்கள்.

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள ஆயிகாரன்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 47). தீவிர தி.மு.க. தொண்டர்.

    கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதிலிருந்தே இவர் சரியாக சாப்பிடாமல் இருந்தார். மேலும் சகநண்பர்களிடம் கூறி வருத்தப்பட்டு கொண்டே இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் படுத்து தூங்கிய ஜனார்த்தனன் இன்று எழுந்திருக்கவே இல்லை.

    அருகே சென்ற அவரை பார்த்தபோது மாரடைப்பு ஏற்பட்டு ஜனார்த்தனன் இறந்தது தெரியவந்தது.

    ஈரோடு கனிராவுத்தர் குளம் காந்தி நகர் முதல் வீதியை சேர்ந்தவர் கணேஷ் இவரது மனைவி ராஜேஸ்வரி (33). கூலி தொழிலாளியாக வேலை பார்க்கிறார்.

    இவர்களுக்கு நந்தினி, செம்பருத்தி என்ற 2 மகள்களும் குருமூர்த்தி என்ற ஒரு மகனும் உள்ளனர்.

    ராஜேஸ்வரி தி.மு.க. மகளிர் அணியில் உறுப்பினராக உள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது மிகுந்த பற்று கொண்டவர் கடந்த 2 நாட்களாக கருணாநிதி உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததை டி.வி.யில் பார்த்து ராஜேஸ்வரி மிகவும் வேதனையுடன் காணப்பட்டார்.

    நேற்று இரவு கருணாநிதி உடல்நிலை திடீர் பின்னடைவு என்ற செய்தியை கேட்டதும் மிகவும் உடைந்து போனார்.

    கலைஞர் ஐயா.. நம்மை விட்டு போய் விடுவாரோ. என சத்தம் போட்டபடி நேற்று இரவு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே ராஜேஸ்வரி பரிதாபமாக இறந்தார்.  #karunanidhi #dmk

    கருணாநிதியின் உடல் நலக்குறைவை தாங்கிக் கொள்ள முடியாததால் பள்ளிப்பட்டு அருகே ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். #DMKVolunteersuicide

    பள்ளிப்பட்டு:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் தி.மு.க. தொண்டர்கள் சோகத்தில் உள்ளனர்.

    கருணாநிதியின் உடல் நலக்குறைவை தாங்கிக் கொள்ள முடியாத எண்ணூர் அன்னை சிவகாமி நகரை சேர்ந்த ராஜூ என்பவர் நேற்று திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தற்போது பள்ளிப்பட்டு அருகே மேலும் ஒரு தி.மு.க. தொண்டர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பள்ளிப்பட்டு அருகே உள்ள வாணிவிலாசபுரம், பழைய காலனியை சேர்ந்தவர் கங்கன் (வயது 65) தீவிர தி.மு.க. தொண்டர். அவர், கருணாநிதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளது பற்றி நண்பர்கள், உறவினர்களிடம் அடிக்கடி மனவேதனையுடன் பேசி வந்தார்.

    நேற்று இரவு அவர் உறவினர்கள் சிலரிடம் பேசியபோது தற்கொலை செய்யப்போவதாக கூறினார். அவரை சமாதானம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் மனவேதனையில் இருந்த கங்கன் அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். #DMKVolunteersuicide 

    ×