என் மலர்

  நீங்கள் தேடியது "kappalur factory"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கப்பலூர் தொழிற்பேட் டையில் தொழிலாளி மர்மமாக இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  பேரையூர்:

  விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள செம்பட்டியைச் சேர்ந்தவர் வீரணன் (வயது 56). இவர் திருமங்கலம் தொழிற்பேட்டையில் உள்ள மாட்டுத்தீவன தயாரிப்பு நிறுவனத்தில் பிட்டராக பணியாற்றி வந்தார்.

  நேற்று இரவு பணியில் இருந்த வீரணன் தொழிற்சாலை வளாகத்துக்குள் இறந்து கிடந்தார். இன்று காலை தொழிற்சாலைக்கு வேலைக்கு வந்தவர்கள் வீரணன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

  இது குறித்து திருமங்கலம் நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து வீரணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வீரணன் எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை.

  அவரது மர்மச்சாவு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

  ×