search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kanyakumari Team Champion"

    • ஆண்கள் பிரிவில் 38 அணிகளும், பெண்கள் பிரிவில் 18 அணிகளும் கலந்து கொண்டு விளையாடின.
    • பெண்கள் பிரிவு இறுதி போட்டியில் மதுரை அமெரிக்கன் கல்லூரி அணியும், நெல்லை சதக் அப்துல்லா அப்பா கல்லூரி அணியும் மோதின.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள படர்ந்தபுளியில் லியா கைப்பந்து கழகம் சார்பில் 18-வது மாநில அளவிலான ஆண், பெண்களுக்கான கைப்பந்து போட்டிகள் 2 நாட்கள் நடந்தன.

    இதில், ஆண்கள் பிரிவில் 38 அணிகளும், பெண்கள் பிரிவில் 18 அணிகளும் கலந்து கொண்டு விளையாடின. போட்டிகள் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடத்தப்பட்டன. போட்டிகளை மார்க்க ண்டேயன் எம்.எல்.ஏ., கனரா வங்கி உதவி பொது மேலாளர் சக்கால சுரேந்திர பாபு தொடங்கி வைத்தனர்.

    இறுதி போட்டிகள் நேற்று முன்தினம் இரவு நடந்தது. ஆண்கள் பிரிவில் கன்னியா குமரி கே.கே.பிரண்ட்ஸ் அணியும், கீழக்கரை அணியும் மோதின. இதில், 24-22, 18-24, 15-9 என்ற புள்ளி கணக்கில் கன்னியாகுமரி அணி வெற்றி பெற்றது. 3-வது இடத்தை புதியம்புத்தூர் அணியும், 4-வது இடத்தை கோவில்ப ட்டி அணியும் பிடித்தன.

    பெண்கள் பிரிவு இறுதி போட்டியில் மதுரை அமெரிக்கன் கல்லூரி அணியும், நெல்லை சதக் அப்துல்லா அப்பா கல்லூரி அணியும் மோதின. இதில், 25-23, 22-25, 15-11 என்ற புள்ளி கணக்கில் மதுரை அணி வெற்றி பெற்றது. 3-வது இடத்தை சென்னை லைப் ஸ்போர்ட்ஸ் அணியும், 4-வது இடத்தை மதுரை லேடி டோக் கல்லூரி அணியும் பிடித்தன.

    தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில், வெற்றி பெற்ற அணிகளுக்கு கனரா வங்கி மண்டல மேலாளர் கவுசல்யா கோப்பைகளை வழங்கி பாராட்டினார். விழாவில், மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் ரமேஷ்குமார், நெல்லை மாவட்ட நீச்சல் கழக தலைவர் திருமாறன், தொழிலதிபர் ராஜாங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை படர்ந்தபுளி லியா கைப்பந்து கழக தலைவர் ஜனகராஜ், செயலாளர் லிங்கவன் தலைமையிலான நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    ×