என் மலர்
நீங்கள் தேடியது "Kamarajar charitable foundation"
- விழாவில் சிறப்பு விருந்தினராக கள்ளாண்ட பெருமாள் கலந்து கொண்டார்
- போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது
தூத்துக்குடி:
தூத்துக்குடி தருவைக்குளத்தில் காமராஜா் நற்பணி மன்றம் சாா்பில் குழந்தைகள் தின விழா பேச்சுப் போட்டி நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கள்ளாண்ட பெருமாள் கலந்து கொண்டார்.
போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இதில் காமராஜர் நற்பணி மன்ற நிர்வாகிகள் தேவ திரவியம், செல்வ சேகர், ராஜேந்திரன், சூசை அந்தோணி, பழம் என்ற அமலதாசன், அற்புதராஜ், அருண், நூலகர் தங்க மாரியப்பன், கார்த்திக், பாக்கியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை காமராஜர் நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் அசோகன், லாரன்ஸ் ஆகியோர் செய்திருந்தனர்.






