என் மலர்
நீங்கள் தேடியது "Kabbadi Training Camp"
- முகாமில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
- விழாவில் பயிற்சி அளித்த பயிற்சியாளர்கள் சென்னை சாய் ஜெயராஜ், ஜானகிராமன்,மணி, சிவா, பனிமேகராஜ், உள்பட பலருக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நினைவுபரிசு வழங்கினார்.
நாசரேத்:
குரும்பூர் அருகே உள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனமும், நாலுமாவடி புது வாழ்வு சங்கமும் இணைந்து 6 ஆண்டுகளாக கோடைகால இலவச கபடி பயிற்சி முகாமினை நடத்தி வருகின்றனர்.
6-வது ஆண்டாக இந்த ஆண்டு இலவச கபடி பயிற்சி முகாம் கடந்த 9-ந் தேதி முதல் தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற்றது. இம்முகாமில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். இவர்களில் 245 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 185 பேர் முழு பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள், உபகர ணங்கள் வழங்கப்பட்டது.
இலவச கபடி பயிற்சி முகாம் நிறைவு விழா நாலுமாவடி ஏலீம் கார்டன் வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட அமச்சூர் கபடி கழக செயலாளர் கிரிஸ்டோபர் ராஜன், அர்ஜுனா விருதுபெற்ற கபடி வீரர் மணத்தி கணேசன், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, தி.மு.க. வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரி சங்கர், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் ஜனகர், தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஆழ்வார்திருநகரி ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் நவீன்குமார், சதீஷ்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் செல்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட அமச்சூர் கபடி கழக தலைவரும், தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரி ப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாண வர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
புரோ கபடி வீரர்களை உருவாக்க முயற்சி எடுத்துவரும் மோகன் சி.லாசரஸ் அவர்களின் சமூகப்பணி, ஆன்மீகப் பணி, விளையாட்டுப் பணி உட்பட பல்வேறு பணிகள் சிறக்க வாழ்த்துகிறேன். இங்கு பயிற்சிபெறும் மாணவர்கள் பள்ளி,கல்லூரிகளுக்கு சென்றாலும் அங்கும் இங்கு பயிற்சிபெற்றதின் சிறப்பை நீங்கள் எடுத்துரைக்க வேண்டும். அதுதான் இந்த பயிற்சி முகாமில் நீங்கள் பங்குபெற்றதற்கான பெருமையாகும். தொடர்ந்து 12 நாட்களாக இந்த பயிற்சி முகாமில் மாணவர்களை ஊக்குவித்து அவர்களுக்கு சிறப்பான பயிற்சிகள் அளித்த அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனையும் மனதார பாராட்டுகிறேன். இப்பணி மென்மேலும் சிறக்க என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக விழாவில் இயேசு விடுவிக்கிறார் விளையாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளர் மணத்தி எட்வின் வரவேற்றார். விழாவில் பயிற்சி அளித்த பயிற்சி யாளர்கள் சென்னை சாய் ஜெயராஜ், ஜானகிராமன், அசோக், சாம்சன், தங்கவேல், மணி, சிவா, பனிமேகராஜ், முத்துகிருஷ்ணன், விஸ்வந்த், மாசானமுத்து, வேல்பாண்டி ஆகியோருக்கு அமைச்சர் நினைவுபரிசு வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசுவிடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ் தலைமையில் ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசன், இயேசு விடுவிக்கிறார் ஊழிய பொதுமேலாளர் செல்வக்குமார், விளை யாட்டுத்துறை ஒருங்கி ணைப்பாளர் மணத்தி எட்வின், பிசியோதெரபி பாக்யராஜ், ஜேம்ஸ் ஆகியோர் செய்திருந்தனர்.
விழாவில் அமச்சூர் கபடி கழக இணைச்செய லாளர் கபடி கந்தன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் அருணாச்சலம், பொதுக்குழு உறுப்பினர் முத்துசெல்வன், மாவட்ட கவுன்சிலர் செல்வக்குமார், வழக்கறிஞர்கள் மனோஜ், ரகுராமன், தி.மு.க. பிரமுகர்கள் பாதாளமுத்து, கார்த்திக், இயேசு விடுவிக்கிறார் ஊழிய மக்கள்தொடர்பு அலுவலர் சாந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






