search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jothimai"

    கரைவேட்டி கட்டாத அதிமுக செயலாளர் போல் கலெக்டர் செயல்படுகிறார் என்று காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மீண்டும் புகார் கூறியுள்ளார். #congressjothimani #karurcollector

    கரூர்:

    கரூர் பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட உள்ளது. இதையொட்டி அங்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கரூர் வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பு குறித்து வேட்பாளர்கள், அவர்களது முகவர்களுடனான கருத்து கேட்பு கூட்டம் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜாராமன் தலைமை தாங்கினார். மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அன்பழகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டம் முடிந்ததும், கூடு தல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜாராமன் மற்றும் க லெக்டர் அன்பழகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உள்ளிட்டோர் கரூர் தளவாபாளையத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கார்களில் சென்றனர்.

    அப்போது மையத்தின் வெளிப்புறத்திலேயே கார்கள் நிறுத்தப்பட்டு, அவர்கள் நடந்தே உள்ளே சென்றனர். பின்னர் வாக்கு எண்ணும் அறைக்குள் யாரும் நுழைந்து விடாதபடி அமைக்கப்பட்டுள்ள கம்பி வலை மற்றும் துணை ராணுவம் மற்றும் போலீசாரின் சுழற்சி முறை பாதுகாப்பு பணி, அனைத்து நடவடிக்கைகளும் சி.சி..டி.வி. கேமரா மூலம் கண்காணிப்பு உள்ளிட்டவற்றை நீண்ட நேரமாக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வு தொடர்பான அறிக்கை தேர்தல் ஆணையத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு, தேர்தல் ஆணையம் அறிவு றுத்தலின் பேரில் பாதுகாப் பினை மேலும் பலப்படுத்தக் கூடிய நடவடிக்கை, எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி உள்பட வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் உடன் இருந்தனர்.

    அதிகாரி ஆய்வை தொடர்ந்து ஜோதிமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரி (கலெக்டர்) மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் தொடர்ந்து ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருகின்றனர். மாவட்ட தேர்தல் அதிகாரி தொலைபேசியில் என்னிடம் தேர்தலை நான் நிறுத்துவேன் என கூறும் அளவுக்கு மோசமான நிலை இருந்தது. மாவட்ட அதிகாரியே இப்படி இருக்கும் போது அவருக்கு கீழே உள்ள அதிகாரிகள் பாதுகாப்பு குறைபாடுடன் இருப்பது ஆச்சரியம் இல்லை. வாக்கு எண்ணிக்கையை இவர்கள் தலைமையில் நடத்தக்கூடாது. வாக்கு எண்ணிக்கையை இந்த அதிகாரிகள் நடத்தினால் நியாயமாக இருக்காது.

    கலெக்டர் எங்கள் மீது கொடுத்த பொய் புகாரில் முன்ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்தோம். விசாரணையில் கலெக்டர் அளித்த புகாருக்கு ஆதாரமாக சிசி டிவி. புட்டேஜை அவர் காட்ட வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    விரைவில் கலெக்டர் கூறியது மிகப்பொய் குற்றச்சாட்டு என்பதும், தேர்தல் அதிகாரி வழக்கத்தில் இல்லாத அளவில் ஒரு கலெக்டர் பத்திரிகையாளர் சந்திப்பு வைத்து, வேட்பாளர் மீதும், முகவர் மீதும் பொய் புகார் அளித்துள்ளார். எவ்வளவு தூரம் அவர் ஆளும் கட்சியின் ஊதுகுழலாக கரை வேட்டி கட்டாத மாவட்ட செயலாளராக செயல்பட்டிருக்கிறார் என்பது கோர்ட்டில் நிரூபிக்கப்படும்.

    தேர்தல் கமி‌ஷன் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. புகார் மீது உடனே அதிகாரியை அனுப்பி விசாரணை நடத்தி யிருக்கின்றனர்.

    கலெக்டரும், எஸ்.பி.யும் ஒரு தலைப்பட்சமாக நடந்து வருவதால் வாக்கு எண்ணிக்கை மையம் முழுவதும் பி.எஸ்.எப். படை வீரர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். கலெக்டரை மாற்றி விட்டு நியாயமான நேர்மையான ஒரு அதிகாரியை நியமித்து பாதுகாப்பை பலப்படுத்தி வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறோம் என்றார். #congressjothimani #karurcollector

    ×