search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewellery robbers"

    ஆசிரியை உள்பட 2 பேரிடம் நகை பறித்த கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகையை பறிமுதல் செய்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் புதுராமகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் வளர்மதி (வயது 48). இவர் ஜெய்பாவாய் மாநகராட்சி பள்ளியில் ஓவிய ஆசிரியையாக வேலைபார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று மாலை இவர் குத்தூஸ்புரம் அருகே மொபட்டில் சென்றபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் வளர்மதியிடம் இருந்து 8 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினார்கள்.

    இதுகுறித்து திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    சம்பவம் நடந்த பகுதியில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நகை பறிப்பு நபர்களை போலீசார் தேடி வந்தனர். திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் மனோகரன் உத்தரவின் பேரில் துணை கமி‌ஷனர் உமா மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சையத் பாபு தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.

    இந்த நிலையில் திருப்பூர் ஊத்துக்குளி ரோடு மண்ணரையில் வாகன தணிக்கையின் போது 2 பேரை தனிப்படை போலீசார் பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் திருப்பூர் போயம்பாளையத்தை சேர்ந்த ரமேஷ் (44), நல்லூரை சேர்ந்த பார்த்தீபன் (40) என்பதும், இவர்கள் தான், ஆசிரியை வளர்மதியிடம் நகை பறித்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

    மேலும், இவர்கள் இருவரும் சேர்ந்து திருப்பூர் ஊரகம், அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் தலா 2 நகை பறிப்பு வழக்குகளிலும் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து மொத்தம் 30 பவுன் நகை மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக ரமேஷ், பார்த்தீபன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    துறையூர் முசிறி பிரிவு ரோடு ரவுண்டாணா அருகில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நகை கொள்ளையர்கள் 2 பேரை பிடித்தனர்.
    துறையூர்:

    துறையூர் முசிறி பிரிவு ரோடு ரவுண்டாணா அருகில் துறையூர் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நம்பர் பிளேட் இல்லாத கார்ஒன்று வந்தது. அதை மடக்கி விசாரனை செய்த போது காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரனாக பேசினர். இதனால் சந்தேகமடைந்து அவர்களை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்ததில் அவர்கள் தூத்துகுடி மாவட்டம் குலையன் கரைசலை சேர்ந்த தனசேகரபாண்டியன்(34) மற்றும் பட்டறை சுரேஷ் என்பவரின் மனைவி தனம் பூங்கொடி(28) என்பது தெரிந்தது.

    அவர்களை விசாரித்ததில் கடந்த மாதம் துறையூர் சாமிநாதன் நகரில் மெடிக்கல் உரிமையாளர் பாபு என்பவர் வீட்டில் 40 பவுன் திருடியதை ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் விசாரனை செய்ததில் முதல் கட்டமாக 8 பவுன் மற்றும் காரை போலீசார் கைபற்றி குற்றவாளிகள் இருவரையும் துறையூர் கோர்ட்டில் ஆஜர் செய்தனர். 

    முக்கிய குற்றவாளியான பட்டறை சுரேஷ் தலைமறைவாக இருப்பதால் அவரை பிடித்தால்தான் மற்ற நகைகளை கைப்பற்றமுடியும் என போலீசார் தெரிவித்தனர்.
    ×