search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "IVF Test"

  • தாய்மை என்பது எல்லா பெண்களுக்கும் அவ்வளவு எளிதாக கிடைத்துவிடுவதில்லை.
  • தற்போது மருத்துவத்தில் டெக்னாலஜி ரொம்பவே முன்னேறி உள்ளது.

  ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிகவும் அழகான மற்றும் அற்புதமான விஷயம் என்னவென்றால் தாய்மை தான். அந்த தாய்மையை போற்றும் விதமாகத்தான் ஒவ்வொரு ஆண்டு மே மாதம் 12-ந்தேதி (இன்று) அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

  ஆனாலும் தாய்மை என்பது எல்லா பெண்களுக்கும் அவ்வளவு எளிதாக கிடைத்துவிடுவதில்லை. அதிலும் பெண்களுக்கு சிக்கல்கள் பல உள்ளன. இருப்பினும் முன்பு உள்ள காலம்போல் இல்லாமல் தற்போது மருத்துவத்தில் டெக்னாலஜி ரொம்பவே முன்னேறி உள்ளது. அதனை சிலர் அறியாமை அல்லது விழிப்புணர்வு இல்லாமை போன்ற காரணங்களால் அறியாமல் உள்ளனர். அதிலும் சில பெண்கள் பயத்தின் காரணமாக தாமதமாக டாக்டரிடம் செல்கின்றனர். அடுத்து தவறான புரிதல்களினாலும் குழப்பத்தில் டாக்டரிடம் செல்வதையும் தவிர்த்துவிடுகின்றனர்.

  அதை விடுத்து ஒவ்வொரு பெண்களும் தங்களுக்கு இருக்கும் பிரச்சினையை டாக்டரிடம் எடுத்துக்கூறினால் ஆரம்பத்திலேயே அவர்களின் பிரச்சினையை சரிசெய்ய ஏதுவாக இருக்கும். ஏனென்றால் ஒவ்வொரு பெண்களுக்கும் அவர்களின் வயதுவரம்பை பொறுத்துதான், கர்பப்பையில் கருமுட்டை வளர்ச்சி அடையும். வயது அதிகமாகும் போது பெண்களுக்கு கருமுட்டையின் வளர்ச்சியும் குறையத் தொடங்கும். இதன் காரணமாகவும் தாய்மையும் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது.

  எனவே, டெக்னாலஜி அதிகமாக வளர்ச்சி அடைந்துள்ள இந்த காலகட்டத்தில் இனியும் தாமதிக்காமல் டாக்டரை அணுகுவதே சிறந்தது. ஏனென்றால் கருமுட்டை வளர்ச்சி அடையாத பெண்களுக்கு கூட தற்போது ஐவிஎப் (IVF)முறையில் கருமுட்டை செலுத்தி தாய்மை அடையச்செய்யும் வசதிகள் உள்ளன.

  தாய்மை என்பது ஒரு பெண்ணிற்கு மிக முக்கியமான கால கட்டம். பெருமைமிக்க பெற்றோராக மாறி இந்த உலகத்திற்கு புதிய வாழ்க்கையை அறிமுகப்படுத்துவது அவசியம். எனவே திருமணமான பெண்கள் ஒருவருடம் மட்டுமே தாய்மைக்காக காத்திருந்து பார்க்கலாம். இல்லையென்றால் தாமதிக்காமல் டாக்டரை அணுகுவதே சிறந்தது.

  • எல்லோருக்கும் இயல்பாக கருத்தரித்தல் அமைந்துவிடுவதில்லை.
  • பலருக்கும் சில காரணங்களால் கருவுறுதலில் சிக்கல் உண்டாகிறது.

  கருத்தரித்தலை எதிர்நோக்கும் எல்லோருக்கும் இயல்பாக கருத்தரித்தல் அமைந்துவிடுவதில்லை. பலருக்கும் சில பல காரணங்களால் கருவுறுதலில் சிக்கல் உண்டாகிறது. இதனால் கருவுறாமை பிரச்சனையை அதிக தம்பதியர் எதிர்கொள்கிறார்கள். கருத்தரிக்க இயலாமையால் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய பரிசோதனைகளுக்கு பிறகு செய்றகை கருவுறுதல் செய்யலாம் என்று மருத்துவர்கள் பரிசோதிக்கிறார்கள். அவர்களுக்கு இந்த IVF கை கொடுக்கிறது.

  கருவுறுதல் தாமதமாகும் போதும் பரிசோதனையில் இயல்பான கருத்தரிப்பு சாத்தியமில்லை எனும் போதும் இந்த இவ்ப் தொழில்நுட்பத்தை விரும்புகிறார்கள்.

  இந்த செயல்முறையின் போது கருப்பையில் இருந்து முட்டைகள் அறுவை சிகிச்சை மூலம் மீட்டெடுக்கப்படுகின்றன. ஆய்வகத்தில் விந்தணுவுடன் சேர்க்கப்பட்டு கருவுறுகின்றன.

  பிறகு பெண்ணின் கருப்பையில் மீண்டும் செருகப்படுகின்றன. தம்பதியர் கருவுறாமை பிரச்சனையில் இருக்கும் போது invitro fertilization (IVF) சிகிச்சையை தேர்வு செய்வதாக இருந்தால் இது குறித்து முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும்.

   நீங்கள் IVF முயற்சிக்கும் தம்பதியராக இருந்தால் சில குறிப்புகளை பின்பற்ற வேண்டும்.

  ஆரோக்கியமான எடையை பராமரிப்பது அவசியம்

  ஆரோக்கியமான எடையை பராமரிப்பது சிகிச்சையில் முக்கியமானது. உடல் பருமனாக இருப்பது மற்றும் குறைவான எடை கொண்டிருப்பது என இரண்டுமே உங்கள் சிகிச்சை வெற்றி விகிதங்களை பாதிக்கச் செய்யலாம். அதிக எடையுடன் இருக்கும் பெண், சிகிச்சையில் கருப்பை கண்காணிப்பை சிரமமாக வைக்கிறது. முட்டைகளை மீட்டெடுக்கும் போது சிரமத்தை உண்டு செய்கிறது.

  ஆரோக்கியமான எடையை பெறுவது உணவு மற்றும் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள். தேவையெனில் உடல் எடை குறைய பயிற்சி போன்றவற்றை செய்யலாம். உணவியல் நிபுணருடன் ஆலோசித்து கார்டியோ, மெட்டபாலிக் எடை இழப்பு திட்டம் போன்றவை எடையை பராமரிக்க உதவலாம். பெண்களோடு, ஆண்களும் உடல் எடையை கட்டுக்குள் வைப்பது நல்லது.

  மன அழுத்தம்

  மன அழுத்தம் உங்கள் சிகிச்சையில் தலையிடலாம். மேலும் IVF சிகிச்சையின் போது மன அழுத்தம் இருந்தால் அது சிகிச்சையை வெற்றி பெற செய்வதில் தடை ஏற்படும். மேலும் இதை குறைப்பது கடினமானதாக இருந்தாலும் கூட மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சிகளில் தம்பதியர் இருவரும் இணைய வேண்டும்.

  மனம், உடல் திட்டங்களில் பதிவு செய்தல், மன அழுத்தத்தை குறைத்தல் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் கர்ப்பத்தின் வெற்றியை சாத்தியமாக்கலாம்.

  விந்தணு ஆரோக்கியத்தை மேம்படுத்த முயற்சிப்பது நல்லது

  விந்தணு ஆரோக்கியத்தை மேம்படுத்த மல்டி வைட்டமின்களின் பயன்பாடு முக்கியம். ஆண்களும் மலட்டுத்தன்மை குறைபாடு வராமல் இருக்க மல்டி வைட்டமின்கள் எடுப்பது நல்லது. உடல் எடையை பராமரிப்பது, உடற்பயிற்சி செய்வது விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தலாம். சரியான கவனிப்பின் கீழ் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தை அதிகரிக்க உதவும் மருந்துகளை ஆண்களும் உட்கொள்ள தொடங்கலாம்.

  இது IVF விளைவுகளில் நன்மை பயக்கும். சில நேரங்களில் விந்தணுவிலிருந்து நேரடியாக விந்து வெளியேறும் அளவுக்கு இவை பலனளிக்கலாம். விந்து பகுப்பாய்வுகளில் எந்த வகையான அசாதாரணங்கள் இருந்தாலும் கருவுறாமை நிபுணரை சந்தித்து உரிய சிகிச்சை பெறுவது அவசியம்.

  புகைப்பிடிக்கும் பழக்கம்

  ஆண்கள் புகைப்பிடிக்கும் போது IVF வெற்றிக்கான வாய்ப்பை வெகுவாக குறைக்கலாம். ஆண்கள் கருத்தரிப்பு சிகிச்சைக்கு முயற்சிக்கும் போது புகைப்பிடிப்பதால் முட்டை மற்றும் விந்தணுக்களின் தரத்தை பாதிக்கலாம். நீங்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தாலும் அதை நிறுத்துவதுதான் சிறந்த வழி.

  விந்தணுக்களின் தரம் அதிகரிக்க மாத்திரைகள்

  விந்தணுக்களின் தரம் மேலும் உறுதி செய்ய சில சப்ளிமெண்ட்கள் உதவுகிறது. மருத்துவர் உங்களுக்கு பரிந்துரைப்பார் அல்லது நீங்களே மருத்துவரிடம் கேட்டு அதற்கான மாத்திரைகளை எடுக்கலாம். இதற்கு மல்டிவைட்டமின்களும் உதவியாக இருக்கும். தம்பதியர் இருவருக்கும் கூட இவை தேவையாக இருக்கலாம்.

  வைட்டமின் டி

  போதுமான அளவு வைட்டமின் டி இருப்பதை உறுதி செய்யுங்கள். ஏனெனில் கருவுறாமை கொண்டுள்ள தம்பதியரில் 40 சதவீதம் நபர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு இருக்கலாம். மேலும் இந்த குறைபாடு IVF உடன் மோசமான விளைவுகளை உண்டு செய்யலாம். கருவுற முயற்சிக்கும் தம்பதியர் மற்றும் கருவுறாமை நிலையில் உள்ளவர்கள் உடல் பரிசோதனையில் வைட்டமின் டி பரிசோதனை செய்வதும் நல்லது. வைட்டமின் டி குறைவாக இருந்தால் வைட்டமின் டி உணவுகள் மற்றும் வைட்டமின் டி மாத்திரைகள் எடுப்பது நல்லது.

  சரியான மருத்துவரை அணுகவும்

  சிறந்த இனப்பெருக்க உட்சுரப்பியல் நிபுணரை தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்களுக்கு வெற்றி கண்டிப்பாக கிடைக்கும். உங்கள் மருத்துவரிடம் ஒளிவு மறைவில்லாத உங்கள் வரலாறு முக்கியம். அப்போதுதான் சரியான காரணங்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.

  கருவுறாமைக்கு பரிசோதனைக்கு பிறகு உங்கள் மருத்துவர் IVF தீர்வு என்று சொன்னால் நீங்கள் உங்கள் சிகிச்சை காலத்தில் சில விஷயங்களில் கவனமாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும். தொடர்ந்து முயற்சி செய்வதும் பொறுமையோடு இருப்பதும் சிகிச்சையில் வெற்றி பெற உதவும். பல நேரங்களில் தம்பதியருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட IVF சுழற்சிகள் இந்த சிகிச்சையில் தேவைப்படலாம். மேலும் முடிவுகள் இந்த சுழற்சியிலிருந்து கணிசமாக வேறுபடலாம்.

  முதல் முறை வெற்றி கிடைக்கவில்லை என்றால் உங்கள் மருத்துவர் அடுத்த சுழற்சியில் மேம்படுத்த சிகிச்சை செய்யலாம். அதனால் பின்னடைவில் சோர்வடையாமல் இருங்கள். ஏனெனில் இவை எதுவும் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்பதால் சில சமயங்களில் இது குறித்து அலட்டிகொள்ளாமல் இருப்பது உங்களை நீங்களே நிம்மதியாக வைத்திருக்க செய்யும். சிகிச்சையில் வெற்றி கிட்டாத போது உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட வேண்டாம். பொறுமையாக இருங்கள். நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

  ×