search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "iti student suicide"

    ஆலங்குடி அருகே சக மாணவர்கள் கேலி, கிண்டல் செய்ததால் ஐ.டி.ஐ. மாணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கட்ராம்பட்டி  காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் அசோக்ராஜ் (வயது 20). இவர் தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஐ.டி.ஐ. படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 1 வாரமாக அசோக்ராஜ் கல்லூரிக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்த தகவல் அறிந்த அவரது பெற்றோர் அசோக்ராஜை கண்டித்தனர். 

    ஏன் செல்லவில்லை என்று கேட்டபோது, அசோக்ராஜ் தன்னுடன் படிக்கும் சக மாணவர்கள் கிண்டல் செய்வதாக கூறினார். இந்நிலையில் நேற்றும் அவர் படிக்க செல்லவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் அவரை மீண்டும் கண்டித்தனர். இதனால் மனவேதனை அடைந்த அசோக்ராஜ் வீட்டில் இருந்த மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். ஆனால் பெற்றோர் தடுத்து விட்டனர். பின்னர் நேற்றிரவு வீட்டில் அனைவரும் தூங்கி விட்டனர். 

    அதிகாலையில் எழுந்த அசோக்ராஜ் மண்எண்ணெய் கேனுடன் வீட்டின் அருகே உள்ள நாடியம்மன் கோவில் காட்டுப்பகுதிக்கு சென்றார். பின்னர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் வடகாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அசோக்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சக மாணவர்கள் கிண்டல் செய்ததால் ஐ.டி.ஐ. மாணவர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    பூட்டிய வீட்டிற்குள் ஐ.டி.ஐ. மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆண்டிமடம்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள ஓலையூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் தனது மனைவியுடன் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சிவசக்தி (வயது 20). கீழப்பழூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். 

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்லூரியில் உள்ள ஆய்வகத்தில் மாணவர் சிவசக்தி ஆய்வக உபகரணத்தை உடைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்த கல்லூரி நிர்வாகத்தினர் அபராத தொகை செலுத்துமாறு கூறியதோடு,    மாணவரின் பெற்றோரையும் கல்லூரிக்கு வரக்கூறியதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த மாணவர் சிவசக்தி சில நாட்களாக கல்லூரிக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

    மேலும் அதே பகுதியில் வசித்து வரும் உறவினர்களிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்துள்ளார். இதற்கிடையே கடந்த இரண்டு நாட்களாக மாணவர் சிவசக்தியை காணவில்லை. அவர் பெற்றோரை காண திருப்பூர் சென்றிருக்கலாம் என நினைத்து அருகில் இருந்தவர்கள் நினைத்திருந்தனர்.

    இந்த நிலையில் இன்று மாணவர் வசித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் விரைந்து வந்த ஆண்டிமடம் போலீசார் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து  உள்ளே சென்று பார்த்தபோது மாணவர் சிவசக்தி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

    உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிய போலீசார் மாணவரின் சாவுக்கு காரணம் என்ன என்று விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×