என் மலர்
நீங்கள் தேடியது "is in full swing"
- பவானி முதல் சின்ன பள்ளம் வரை ரூ.85 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணி நடைபெற உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
- மேட்டூர் மெயின் ரோட்டில் சிறிய பாலங்கள் 45, பெரிய பாலங்கள் இரண்டு புதிய பாலங்கள் இரண்டு 49 பாலங்கள் கட்டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
பவானி:
ஈரோட்டில் இருந்து அக்ரஹாரம், ஆர்.என். புதூர், லட்சுமி நகர், பவானி, அம்மாபேட்டை, மேட்டூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூர் செல்ல இந்த மேட்டூர் மெயின் ரோடு பிரதான சாலையாக அமைய பெற்று உள்ளது.
இந்த மேட்டூர் மெயின் ரோட்டில் தினசரி நூற்றுக்கணக்கான பைக், பஸ், கார், வேன், லாரி மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகிறது.
நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில் தொப்பூர், மேட்டூர், பவானி, ஈரோடு ஜிரோ பை ஜிரோ வரை 7 மீட்டராக உள்ள இந்த தார் ரோட்டை தற்போது 10 மீட்டர் அகலம் ஏற்படுத்தும் வகையில் ரோட்டின் இரு பகுதிகளிலும் மூன்று மீட்டர் அகலம் ஏற்படுத்தும் வகையில் கடின புருவல்கள் கொண்ட தார் சாலை அமைக்கும் பணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 4-ந் தேதி தொப்பூரில் தொடங்கியது.
அதேபோல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வரும் இந்த பணியானது தற்போது பவானி, குப்பிச்சிபாளையம், பெரும்பள்ளம் மற்றும் பிளாட்டினம் மஹால் என பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தனித்தனி ஒப்பந்ததாரர்கள் மூலம் சாலை விரிவாக்க பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிகள் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ள தாகவும், பவானி முதல் சின்ன பள்ளம், பிளாட்டினம் மஹால் வரை ரூ.85 கோடி மதிப்பீட்டில் இப்பணி நடைபெற உள்ளதாக இத்துறை சார்ந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த மேட்டூர் மெயின் ரோட்டில் சிறிய பாலங்கள் 45, பெரிய பாலங்கள் இரண்டு புதிய பாலங்கள் இரண்டு 49 பாலங்கள் கட்டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தச் சாலை விரிவாக்க பணிகள் நிறைவடைந்த பின்னர் இவ் வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு வாகன போக்குவரத்து ஏற்படுவதை தவிர்க்கும் விதமாகவும், அதிக அளவில் ஏற்படும் விபத்துகளை குறைக்கவும் இந்த விரிவாக்க பணிகள் மூலமாக தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் பணியின் போது மேட்டூர் மெயின் ரோட்டில் உள்ள இரு புறமும் வளர்ந்துள்ள புளிய மரங்கள் அப்புறப்படுத்தாமல் அகலபடுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
அதே போல் பவானி நகரப் பகுதியில் உள்ள மேட்டூர் மெயின் ரோட்டில் இடையூறாக காணப்படும் மரங்கள் கண்டறியப்பட்டு அவைகள் அப்புறப்படுத்தப்பட்டு சாலை விரிவாக்க பணி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
- புதிய ரவுண்டானா அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
- நீர் வீழ்ச்சி, நினைவு சின்னம், அலங்கார விளக்குகள் அமைத்து பராமரிக்கப்படும்.
ஈரோடு:
தமிழக அரசின் சார்பில் ஈரோடு மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டும், முடிவுற்ற திட்டப்பணிகள் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டும் வருகிறது.
அந்த வகையில் ஈரோடு மாநகராட்சியில் சாலை மேம்பாட்டிற்காக நெடுஞ்சாலைத்துறையுடன் இணைந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலைகள் மேம்படுத்தும் பணி,
நவீன சாலை அமைக்கும் பணி, சாலை விரிவாக்கம் செய்து மழை நீர் வடிகால் அமைத்தல், பாதசாரிகள் நடந்து செல்ல ஏதுவாக நடைமேடை அமைக்கும் பணி போன்ற திட்டப்பணிகள்
ஈரோடு காவேரி சாலை-ஆர்.கே.வி. சாலை, மூலப்பாளை யம்-பூந்துறை சாலை, ஈ.வி.என்.சாலை, ரெயில்வே நிலையம் சாலை, காந்திஜி சாலை, கலெ க்ட்ரேட்-குமலன்குட்டை செல்லும் பெருந்துறை சாலை போன்ற பகுதிகளில் நடந்து வருகிறது.
மேலும் தற்போது மாநகராட்சி மாடல் சிட்டி என்ற புதிய திட்டத்தில் ஈரோடு அரசு மருத்துவ மனை சந்திப்பிலும், காளைமாட்டு சிலை சந்திப்பிலும் தலா ரூ.30 லட்சம் என ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரவுண்டானா அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்காக ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா பகுதியிலும், காளைமாட்டு சிலை பகுதியிலும் ஏற்கனவே இருந்த ரவுண்டானாக்களை இடித்து அப்புறப்படுத்தி,
விரிவுப்படுத்திய புதிய ரவுண்டானா அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது இப்பணிகள் 30 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஈரோடு மாநகராட்சியின் சார்பில் மாடல் சிட்டி திட்டத்தில் ஈரோடு அரசு மருத்துவமனை சந்திப்பு, காளைமாட்டு சிலை சந்திப்பில் தலா ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரவுண்டானா அமைக்கப்ப ட்டு வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தே ர்தல் காரணமாக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு தற்போது முழு வீச்சில் பணிகள் நடந்து வருகிறது.
ரவுண்டானாக்களை விரிவுப்படுத்திட முறையாக ஆய்வு செய்து அதற்கேற்றார் போல அமைத்துள்ளோம். அரசு சார்பில் நெடுஞ்சாலை துறை மூலம் ரவுண்டானா மற்றும் பாதசாரிகள் நடந்து செல்ல முறையான நடைபாதை, போக்குவரத்து சிக்னல்கள், மழைநீர் வடிகால் போன்றவை கட்டமைக்க ப்படும்.
அதைத்தொடர்ந்து 3-ல் 1 பங்கு தனியார் பங்களப்பு டன் நீர் வீழ்ச்சி, நினைவு சின்னம், அலங்கார விளக்குகள் அமைத்து பராமரிக் ப்படும்.
அரசு மருத்துவமனை ரவுண்டானாவும், காளை மாட்டு சிலை ரவுண்டானா நகரின் முக்கிய பகுதியாக இருக்கிறது. இதனால் காளைமாட்டு சிலை ரவுண்டானா பகுதியில் ஏற்கனவே உள்ளதை போல புதிய காளைமாட்டு சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு மருத்து வமனை ரவுண்டானாவில் என்ன மாதிரியான நினைவு சின்னம் அமைக்கப்படும் என்பதை மாவட்ட நிர்வாகம் முடிவு செய்யும். அதன்பின் ரவுண்டானா பணிகள் முழுமையாக நிறைவு பெறும். இந்த பணிகள் வருகிற ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும்.
இதேபோல் திண்டல் ரிங் ரோடு சந்திப்பில் அமைக்க ப்பட்ட ரவுண்டானா 100 சதவீதம் பணிகள் நிறை வடைந்துள்ளது. மேட்டுக்கடை பகுதியில் அமைக்க ப்பட்ட ரவு ண்டானா நிலப்பிரச்சனை காரண மாக இறுதி கட்டத்தில் நிற்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






