search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "is attack"

    சிரியாவின் கிழக்கு பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் பரிதாபமாக பலியாகினர். #ISAttack
    பெய்ரூட்:

    சிரியாவில் பல்வேறு கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. 

    கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் சிரியா அரசுக்கு ரஷியா மற்றும் ஈரான் நாடுகள் ஆதரவாக உள்ளன. சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பல்வேறு பகுதிகளை அரசு படையினர் மீட்டு வருகின்றனர்.
     


    இதற்கிடையே, உள்நாட்டுப் போரால் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ள சிரியா நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நேற்று  கிளர்ச்சியாளர்கள் மீது கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. #ISAttack
    சிரியாவின் கிழக்கு பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 41 பேர் பரிதாபமாக பலியாகினர். #ISAttack
    பெய்ரூட்:

    சிரியாவில் பல்வேறு கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. 

    கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் சிரியா அரசுக்கு ரஷியா மற்றும் ஈரான் நாடுகள் ஆதரவாக உள்ளன. சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பல்வேறு பகுதிகளை அரசு படையினர் மீட்டு வருகின்றனர்.
     
    இதற்கிடையே, உள்நாட்டுப் போரால் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ள சிரியா நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. #ISAttack
    சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 போராளிகள் பலியாகினர் என பிரிட்டன் மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. #ISAttack
    பெய்ரூட்:

    சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர்.

    இதுதவிர, ஐ.எஸ். பயங்கரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த குழுக்களையும் வேட்டையாட அமெரிக்க விமானப் படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றன.

    இந்நிலையில், சிரியாவின் தென் பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நேற்று திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த  தாக்குதலில் 17 போராளிகள் கொல்லப்பட்டனர். இதில் 6 படைவீரர்களும் அடக்கம் எனவும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் சிரியாவில் உள்ள பிரிட்டனுக்கான மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. #ISAttack #Tamilnews
    சிரியாவின் டெய்ர் அல்-சோர் பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய ஆவேச தாக்குதலில் 35 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #SyriaAttack

    டமாஸ்கஸ்:

    சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர். இதுதவிர, ஐ.எஸ். பயங்கரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த குழுக்களையும் வேட்டையாட ரஷியா விமானப் படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றன.

    இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற சண்டையில் கூட்டுப்படையினர் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து கடைசி நகரையும் கைப்பற்றினர்.



    இந்நிலையில், டெய்ர் அல்-சோர் மாகாணத்தில் உள்ள மயாதின் நகரில் சிரியா மற்றும் ரஷியாவை சேர்ந்த ராணுவ வீரர்கள்  இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 35 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சண்டையில் 43 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உயிரிழந்தவர்களில் 26 பேர் சிரியாவை சேர்ந்தவர்கள் எனவும், 9 பேர் ரஷியாவை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது. முன்னதாக இந்த பகுதியில் உள்ள அரசு ஆயுத கிடங்கை குறிவைத்து சில பயங்கரவாதிகள் நேற்றிரடு நடத்திய தாக்குதலில் 4 ரஷிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. #SyriaAttack #tamilnews
    ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் சிரியா படைவீரர்கள் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #ISAttack
    டமாஸ்கஸ்:

    சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர். இதுதவிர, ஐ.எஸ். பயங்கரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த குழுக்களையும் வேட்டையாட அமெரிக்க விமானப் படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றன.

    இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற சண்டையில் கூட்டுப்படையினர் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து கடைசி நகரையும் கைப்பற்றினர்.

    இந்நிலையில், சிரியாவின் படியா பகுதியில் சென்ற படைவீரர்கள் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் கார் குண்டு வெடிப்பு மூலம் தாக்குதல் நடத்தினர்.

    இந்த வெடிகுண்டு தாக்குதலில் படைவீரர்கள் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் சிரியாவில் உள்ள மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. #ISAttack #Tamilnews
    ×