என் மலர்
செய்திகள்

சிரியா - ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் பலி
சிரியாவின் கிழக்கு பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் பரிதாபமாக பலியாகினர். #ISAttack
பெய்ரூட்:
சிரியாவில் பல்வேறு கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.
கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் சிரியா அரசுக்கு ரஷியா மற்றும் ஈரான் நாடுகள் ஆதரவாக உள்ளன. சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பல்வேறு பகுதிகளை அரசு படையினர் மீட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, உள்நாட்டுப் போரால் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ள சிரியா நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நேற்று கிளர்ச்சியாளர்கள் மீது கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. #ISAttack
Next Story






