search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian television programe"

    இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பாகிஸ்தான் சேனல்களில் ஒளிபரப்ப நாம் அனுமதிக்கக்கூடாது. ஏனெனில் அவை நமது கலாசாரத்தை சீரழிப்பதாக பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தெரிவித்துள்ளார். #IndianTelevision #Culture #Pakistan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களில் இந்திய டி.வி. நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப, பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 2016-ம் ஆண்டு தடை விதித்தது.

    அதே போல் வனொலிகளில் இந்திய நிகழ்ச்சிகள் இடம் பெறவும் தடை விதிக்கப்பட்டது. ஆனால் கடந்த 2017-ம் ஆண்டு லாகூர் ஐகோர்ட்டு இந்த தடையை நீக்கி உத்தரவிட்டது. இதை எதிர்த்து பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு தலைமை நீதிபதி மியான் சாஹிப் நிசார் தலைமையில் 3 நீதிபதிகளை கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    மனுவை விசாரித்த நீதிபதிகள் லாகூர் ஐகோர்ட்டு விதித்த தீர்ப்பை ரத்து செய்து, பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையத்தின் தடையை மீண்டும் அமல்படுத்தினர். இந்த நிலையில் இந்த மனு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் பேசிய தலைமை நீதிபதி மியான் சாஹிப் நிசார், “இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பாகிஸ்தான் சேனல்களில் ஒளிபரப்ப நாம் அனுமதிக்கக்கூடாது. ஏனெனில் அவை பாகிஸ்தானின் கலாசாரத்தை சீரழிக்கிறது” என காட்டமாக கூறினார். அதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை பிப்ரவரி முதல் வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
    ×