என் மலர்
நீங்கள் தேடியது "Indian players Manu Bhaker"
- விளையாட்டுத் துறைக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதாகும்.
- பாரிஸ் ஒலிம்பிக்கில் மனு பாக்கர் இரு வெண்கலப் பதக்கங்கள் வென்றார்.
மத்திய அரசால் விளையாட்டுத் துறைக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதாகும். கேல் ரத்னா விருதுக்கு தகுதியான வீரர்- வீராங்கனைகளின் பெயர்களை சம்பந்தப்பட்ட விளையாட்டு சம்மேளனங்கள் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்கின்றன.
இந்தாண்டுக்கான கேல் ரத்னா விருதுகள் குறித்த அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் இரு வெண்கலப் பதக்கங்கள் வென்ற துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பதிவு வைரலானது.
அவரது பதிவில், "கேல் ரத்னா விருதுக்கு நான் தகுதி வாய்ந்தவரா?" என்று அவர் பதிவிட்டுள்ளார். அதில் 2 வெண்கல பதக்கத்துடன் அவர் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவு வைரலானதும் நெட்டிசன்கள் மனு பாக்கரை கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். தனது பதிவை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததும் அந்த பதிவை மனு பாக்கர் நீக்கியுள்ளார்.






