search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "india vs Australia series"

    • இன்றைய டெஸ்டுக்கான ஆடுகளமும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
    • 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இன்றைய டெஸ்டுக்கான ஆடுகளம் மெதுவான தன்மையுடன், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆடுகளம் வறண்டு காணப்படுவதால் சீக்கிரமே வெடிப்பு ஏற்பட்டு சுழற்பந்து வீச்சுக்கு கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே இந்த டெஸ்டிலும் அஸ்வின், ஜடேஜாவின் தாக்கம் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா செல்கிறது. இரு அணிகள் இடையே மூன்று 20 ஓவர் போட்டி, 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. #INDvsAus
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா செல்கிறது. ஜனவரி மாதம் வரை அந்நாட்டில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர், 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

    நவம்பர் 21-ந் தேதி போட்டிகள் தொடங்குகிறது. ஜனவரி 18-ந் தேதியுடன் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் முடிகிறது.

    20 ஓவர் போட்டிகள் முதலில் நடக்கிறது. நவம்பர் 21-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 20 ஓவர் போட்டிகள் நடைபெறுகின்றன. அதைத் தொடர்ந்து டிசம்பர் 6-ந் தேதி டெஸ்ட் போட்டிகள் தொடங்கி ஜனவரி 3-ந் தேதியுடன் முடிகிறது. ஒருநாள் தொடர் ஜனவரி 12-ந் தேதி தொடங்குகிறது.

    இங்கிலாந்தில் 2019-ம் ஆண்டு நடைபெறும் உலக கோப்பை போட்டிக்கு ஆஸ்திரேலிய பயணம் பயன் உள்ளதாக அமையும்.

    2014-15ம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியா பயணத்தில் டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தது. 2015-16ல் ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடர்களில் இந்திய அணி பங்கேற்றது. 20 ஓவர் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 4-1 என்ற கணக்கிலும் கைப்பற்றி இருந்தது.

    இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் விவரம்:-

    நவம் 21: முதல் 20 ஓவர் போட்டி (பிரிஸ்பேன்)

    நவம் 23: 2-வது 20 ஓவர் (மெல்போர்ன்)

    நவம் 25: கடைசி 20 ஓவர் (சிட்னி)

    டிசம் 6-10: முதல் டெஸ்ட் (அடிலெய்ட்)

    டிசம் 14-18: 2-வது டெஸ்ட் (பெர்த்)

    டிசம் 26-30: 3-வது டெஸ்ட் (மெல்போர்ன்)

    ஜனவரி 3-7: கடைசி டெஸ்ட் (சிட்னி)

    ஜனவரி 12: முதல் ஒருநாள் போட்டி (சிட்னி)

    ஜனவரி 15: 2-வது ஒருநாள் போட்டி (அடிலெய்ட்)

    ஜனவரி 18: கடைசி 3-வது ஒருநாள் போட்டி (மெல்போர்ன்). #INDvsAus
    ×