search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "In the districts"

    • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
    • இன்று காலை மாவட்டம் முழுவதும் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு சீதோசண நிலையில் மாற்றம் ஏற்பட்டு பரவலாக மழை பெய்தது. குறிப்பாக ஆத்தூர், கொங்கவல்லியில் கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. கோடைகாலத்தில் பெய்த மழை விவசாய பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆத்தூரில் 21 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    கெங்கவல்லி 15 , வீர கனூரில் 4 மில்லி மீட்டர் என சேலம் மாவட்டம் முழுவதும் 40 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இன்று காலை மாவட்டம் முழுவதும் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது.

    ×