search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "in textile market"

    • கடந்த சில வாரங்களாக வெளியூர் மொத்த வியாபாரிகள், உள்ளூர் சில்லரை வியாபாரிகள் வருகை குறைவாக இருந்ததால் வியாபாரம் மந்த நிலையில் இருந்து வந்தது.
    • ஆடி மாதம் முழுவதும் கோவிலில் விசேஷம் உள்ளதால் காட்டன் துணிகள், காவி வேஷ்டி, சட்டைகள், துண்டுகள், சேலைகள் விற்பனை விறு விறுப்பாக நடந்து வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு ஜவுளி சந்தையானது வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடை பெறுவது வழக்கமாகும். கடந்த சில வாரங்களாக வெளியூர் மொத்த வியாபாரிகள், உள்ளூர் சில்லரை வியாபாரிகள் வருகை குறைவாக இருந்ததால் வியாபாரம் மந்த நிலையில் இருந்து வந்தது.

    இந்நிலையில் ஆடிப்பண்டிகையை யொட்டி இந்த வாரம் முதல் மீண்டும் வெளியூர் வியாபாரிகள் வரத்தொடங்கி உள்ளதாகவும், மொத்த வியாபாரம் 30 சதவீதத்தை தாண்டி நடந்ததாகவும், ஒரு சில ரகங்களுக்கு ஆடித்தள்ளுபடி வழங்கப்ப ட்டுள்ளதால் சில்லரை விற்பனை அதிக அளவில் நடந்ததாக வியாபாரிகள் கூறினர்.

    இது குறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் தரப்பில் கூறியதாவது:-

    ஆடிப்பண்டிகை சீசன் விற்பனை கடந்த வாரம் முதல் தொடங்கி உள்ளது. மொத்த வியாபாரம் 30 சதவீதம் வரையிலும், சில்லரை வியாபாரம் 40 சதவீதம் வரையும் நடந்துள்ளது. குறிப்பிட்ட ரெடிமேடு ரகங்களுக்கு ஆடித்தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதால் சில்லரை வர்த்தகம் அதிகமாக நடந்தது.

    வேட்டி, சட்டை, பேண்ட், துண்டு, சேலை, சுடிதார், லுங்கி உள்ளிட்டவைகள் அதிக அளவில் விற்பனையானது. கடந்த சில நாட்களாக நூல் விலை குறைந்து வருவதால் ஜவுளிகளின் விலையும் சற்று குறையும் வாய்ப்பு உள்ளது.

    இந்த வாரம் ஏற்னவே இருந்த ஜவுளிகளை பழைய விலைக்கு விற்பனை செய்துள்ளோம். அடுத்த வாரத்தில் இருந்து புதிய ரகங்கள் வரும் போது, விலையும் சற்று குறைய வாய்ப்பு உள்ளது.

    ஆடிப்பண்டிகை வரை தினசரி கடைகளிலும் வியாபாரம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதேபோல் ஆடி மாதம் முழுவதும் கோவிலில் விசேஷம் உள்ளதால் காட்டன் துணிகள், காவி வேஷ்டி, சட்டைகள், துண்டுகள், சேலைகள் விற்பனை விறு விறுப்பாக நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×