search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Imsai Arasan 24am Pulikesi"

    இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்த நடிகர் வடிவேலு, மேலும் 2 கோடி ரூபாய் வாங்கிக் கொடுத்தால் நடிக்க தயார் என்று கூறியிருக்கிறார். #Vadivelu
    உலக தமிழர்களையே சிரிக்க வைக்கும் வடிவேலு தயாரிப்பாளரை கதற விடலாமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. எல்லாம் இம்சை அரசன் 2 படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் தான். வடிவேலு சிம்புதேவன் ‌ஷங்கர் கூட்டணியில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற படம் இம்சை அரசன் 23-ம் புலிகேசி.

    இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டார்கள். படப்பிடிப்பு தொடங்கி 8 நாட்கள் சென்ற நிலையில் வடிவேலு படக்குழுவினரிடம் கோபம் கொண்டு படப்பிடிப்பை புறக்கணித்து விட்டார். ஆடை வடிவமைப்பாளரில் தொடங்கிய சிக்கல் வடிவேலுக்கு தடை விதிக்கும் அளவுக்கு சென்றுவிட்டது. தயாரிப்பாளர் சங்கர் வடிவேலுவால் தனக்கு இழப்பான ரூ.9 கோடியை அவரிடம் இருந்து வாங்கி தர வேண்டும் என்று புகார் கொடுத்து இருக்கிறார்.



    விஷால் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. தொடக்கத்தில் பிடி கொடுக்காமல் பேசிய வடிவேலு இப்போது மேலும் ரூ.2 கோடி வாங்கிக் கொடுத்தால் படத்தில் நடிக்க தயார்’ என்று கூறி இருக்கிறார். இந்த சிக்கலை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் விழிக்கிறது சங்கம். விரைவிலேயே வடிவேலு நடிக்க தடை வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்த வடிவேலுக்கு, தயாரிப்பாளர் சங்கம் இறுதி கெடு விதித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Vadivelu
    சிறுவர்களையும் பெரியவர்களையும் சிரிக்க வைத்த வடிவேலுவுக்கு புதிய சிக்கல் வந்துள்ளது. இவர் நடித்து 2006-ல் வெளிவந்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் நல்ல வசூல் பார்த்ததால் அதன் இரண்டாம் பாகத்தை ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற பெயரில் இயக்குனர் ஷங்கர் தயாரிக்க முன்வந்தார்.

    இதற்காக வடிவேலுக்கு குறிப்பிட்ட தொகையை சம்பள முன்பணமாக கொடுத்து ஒப்பந்தம் செய்தனர். இந்த படத்தையும் முதல் பாகத்தை இயக்கிய சிம்புதேவனே டைரக்டு செய்ய முடிவானது. சென்னையில் பல கோடி செலவில் அரண்மனை அரங்குகள் அமைத்து படப்பிடிப்பையும் தொடங்கினர். சில நாட்கள் அதில் நடித்த வடிவேலு தொடர்ந்து நடிக்க முடியாது என்று விலகி விட்டார்.

    இதனால் படப்பிடிப்பு நின்று போனது. அரங்குகளையும் பிரித்து விட்டனர். இந்த பிரச்சினை தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு போனது. வடிவேலுவிடம் பேசி படப்பிடிப்புக்கு அனுப்பி வைக்கும்படி ஷங்கர் மனு அளித்து இருந்தார். நடிகர் சங்கம் மூலம் வடிவேலுக்கு நோட்டீசு அனுப்பி விளக்கம் கேட்கபட்டது. படத்தில் நடிக்கும்படியும் வற்புறுத்தப்பட்டது.

    படப்பிடிப்பை தாமதமாக தொடங்கி தனக்கு பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்தியதால் அந்த படத்தில் நடிக்க முடியாது என்று பிடிவாதமாக மறுத்தார் வடிவேல். தொடர்ந்து பேசியும் பிரச்சினைக்கு தீர்வு வரவில்லை. படத்துக்கு செலவழித்த ரூ.9 கோடியை வடிவேலு தனக்கு நஷ்ட ஈடாக அளிக்க வேண்டும் என்று படக்குழு சார்பில் இன்னொரு புகார் மனு அளிக்கப்பட்டது.



    இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு வடிவேலு இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க வேண்டும் என்று கெடு விதித்து ஒரு வாரம் அவகாசம் வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அதற்கு மறுத்தால் வடிவேல் படங்களில் நடிக்க தடை விதிக்கப்படும் என்று தயாரிப்பாளர்கள் சங்க வட்டாரத்தில் கூறப்படுகிறது.
    ×