என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IFS Finance Corporation"

    • வெளிநாட்டு பணபரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களும் பறி முதல் செய்யப்பட்டுள்ளது.
    • வழக்கிற்கு பயந்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய இயக்குனர்களை பிடிக்க ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை கிண்டியில் செயல்பட்டு வந்த ஐ.எப்.எஸ். நிதி நிறுவனம் 84 ஆயிரம் பேரிடம் ரூ.5,900 கோடி மோசடி செய்தது குறித்து பெருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்நிறுவனத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு மாதம் 10 சதவீதம் வட்டி தருவதாக கூறியதால் ஏராளமானோர் இதில் முதலீடு செய்தனர். இதற்கு வட்டியும் அசலும் கொடுக்காமல் வந்த புகாரை தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக ரூ.1.14 கோடி ரொக்கம், 791 வங்கி கணக்குகளில் இருந்த ரூ.121 கோடி பணம் முடக்கப்பட்டு ரூ.39 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள், 18 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் வெளிநாட்டு பண பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களும் பறி முதல் செய்யப்பட்டுள்ளது.

    வழக்கிற்கு பயந்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய இயக்குனர்களை பிடிக்க ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் இதில் தொடர்புடைய நபர்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில் 2 ஆயிரம் பேரிடம் ரூ.550 கோடி வசூல் செய்த காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த முகவர் ஹேமந்திரகுமார் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து சொத்து ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    ஹேமந்திரகுமார் முன்னாள் போலீஸ் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர் என்று கூறப்படுகிறது.

    ×