search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ICC World XI vs West Indies"

    உலக லெவன் அணியில் இடம்பெற்றுள்ள இந்திய, பாகிஸ்தான் வீரர்கள் ஒரே டிரெசிங் ரூமை பகிர்ந்துகொள்ள இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக முன்னாள் ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் ஆண்டி பிளவர் தெரிவித்துள்ளார். #WivsWXI

    துபாய்: 

    கரீபியன் தீவுகளில் கடந்த ஆண்டு கடுமையான சூறாவளி காற்று வீசியது. இதனால் ஏற்பட்ட சேதங்களை சரி செய்ய, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் உலக லெவன் அணிகள் மோதும் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடக்கிறது. 

    இதற்கான உலக லெவன் அணியில் இடம்பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் ஒரே டிரெசிங் ரூமை பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியாக இருப்பதாக முன்னாள் ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் ஆண்டி பிளவர் தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து ஆண்டி பிளவர் கூறுகையில்,‘ உலக லெவன் அனிக்காக விளையாடுவது மிகவும் சிறப்பான விஷயம். குறிப்பாக எல்லா அணி வீரர்களும் ஒரே இடத்தில் இருக்கும் போது, பல அனுபவங்கள் கிடைக்கும். இந்த முறை மிகவும் அரிய நிகழ்வாக இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் ஒரே டிரெசிங் ரூமை பகிர்ந்துகொள்ள இருப்பது சிறப்பான விஷயம்.’ என அவர் கூறினார்.



    உலக லெவன் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. அப்ரிடி (கேப்டன்), 2. சாம் பில்லிங்ஸ், 3. தமிம் இக்பால், 4. தினேஷ் கார்த்திக், 5. ரஷித் கான், 6. சந்தீப் லாமிச்சேன், 7 மெக்கிளேனகன், 8. சோயிப் மாலிக், 9. திசாரா பெரேரா, 10, லூக் ரோஞ்சி, 11. அடில் ரஷித், 12. முகமது ஷமி. #WivsWXI
    மூட்டு வலி காரணமாக ஐசிசி உலக லெவன் அணியில் விளையாட முடியாது என்று அறிவித்த அப்ரிடி, தற்போது விளையாடுவதாக தெரிவித்துள்ளார்.
    மூட்டு வலி காரணமாக ஐசிசி உலக லெவன் அணியில் விளையாட முடியாது என்று அறிவித்த அப்ரிடி, தற்போது விளையாடுவதாக தெரிவித்துள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் - ஐசிசி உலக லெவன் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டி20 கிரிக்கெட் வருகிற 31-ந்தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக உலக லெவனில் ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.



    பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஷாகித் அப்ரிடி உலக லெவன் அணிக்காக விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கால் மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக உலக லெவன் அணியில் இடம்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் உலக லெவன் அணியில் விளையாடுவேன் என்று அப்ரிடி தெரிவித்துள்ளார்.
    ×