search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hydrology"

    • அனைவருக்கும் வீடு திட்டத்தில் ஏழை, எளியோர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • தமிழக அரசின் நீர்நிலை புறம்போக்கு பகுதியில் வசிப்போருக்கு முன்னுரிமை தரப்படும்.

    மதுரை

    மதுரை கோட்ட நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், சார்பில் திருமங்கலத்தை அடுத்த கரடிக்கல் கிராமத்தில் 840 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி நடந்து வருகிறது. பொருளாதாரத்தில் நலிவடைந்த, ஆண்டு வருமானம் 25 ஆயிரம் ரூபாய்க்கு உட்பட்ட வீடு இல்லாதோர் விண்ணப்பிக்கலாம்.

    400 சதுரடி பரப்பளவு உள்ள குடியிருப்புக்கு மத்திய-மாநில அரசின் மானியம் போக மீதி ரூ.1 லட்சம் தொகையை பயனாளி செலுத்த வேண்டும்.

    அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பு வோர் கணவன் மற்றும் மனைவியின் ஆதார் அட்டை நகல்கள், பங்களிப்புத் தொகை ரூ.1 லட்சம் செலுத்துவதற்கான சம்மதக் கடிதம், "The Executive Engineer, TNUHDB, Madurai Division, Madurai" என்ற பெயரில் 10 ஆயிரம் ரூபாய்க்கான வங்கி வரைவோலை ஆகியவற்றுடன், 'நிர்வாகப்பொறியாளர் அலுவலகம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய எண்.69, கே.கே.நகர் மெயின் ரோடு, மதுரை 20 என்ற முகவரியில் வருகிற 28, 29-ந் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடக்கும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். தமிழக அரசின் நீர்நிலை புறம்போக்கு பகுதியில் வசிப்போருக்கு முன்னுரிமை தரப்படும்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெ க்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    ×