என் மலர்
நீங்கள் தேடியது "husband with dispute"
என்.ஜிஓ. காலனி:
சுசீந்திரம் புத்தளம் உசர விளை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன், தொழிலாளி. இவரது மனைவி நாகமணி முத்துசங்கு (வயது 39). இவர்களுக்கு திருமணம் முடிந்து ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று வீட்டின் அருகே உள்ள ஒரு கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவிற்கு கண்ணன், தனது மனைவியை வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அவர் திருவிழாவிற்கு செல்ல மறுத்துள்ளார்.
இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. கண்ணன் மட்டும் திருவிழாவிற்கு சென்றிருந்தார். பின்னர் இரவு கோவிலில் இருந்து வீடு திரும்பியபோது வீட்டில் இருந்த மனைவி மாயமாகி இருந்தது தெரியவந்தது. மனைவியை தேடிப்பார்த்தார்.
அப்போது வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கியது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மனைவி இறந்து விட்டதாக கூறியதை கேட்டதும், கண்ணன் கதறி அழுதார்.
இது குறித்து சுசீந்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பிரசாத்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






