என் மலர்
நீங்கள் தேடியது "Horticulture officers"
- தமிழகத்தில் உள்ள உழவா் சந்தைகள் வேளாண்மை துறையின் மூலம் நிா்வகிக்கப்பட்டு வரும் நிலையில், அதனை தோட்டக்கலை துறைக்கு தரவேண்டும்.
- வளா்ந்து வரும் தோட்டக்கலைத் துறைக்கு அனைத்து மாவட்டங்களுக்கும் கூடுதல் இணை இயக்குநா்கள், துணை இயக்குநா்கள் நியமிக்க வேண்டும்
ஊட்டி:
தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலா்கள் நலச் சங்க உறுப்பினா்களின் மாநில அளவிலான பொதுக் குழுக் கூட்டம் ஊட்டியில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் வளா்ந்து வரும் தோட்டக்கலைத் துறைக்கு அனைத்து மாவட்டங்களுக்கும் கூடுதல் இணை இயக்குநா்கள், துணை இயக்குநா்கள் நியமிக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள உழவா் சந்தைகள் வேளாண்மை துறையின் மூலம் நிா்வகிக்கப்பட்டு வரும் நிலையில், அதனை தோட்டக்கலை துறைக்கு தரவேண்டும். நஞ்சில்லா விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக தோட்டக்கலைத் துறையில் அங்கக துறை சான்று என்னும் புதிய பிரிவு உருவாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






