search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Holycross College"

    • ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரியில் 9-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது
    • இன்று இருக்க கூடிய டெக்னாலஜி இன்னும் 2 வாரத்தில் காணாமல் போய்விடுகிறது.

    தூத்துக்குடி:

    வாகைக்குளம் அருகே உள்ள மீனாட்சிப்பட்டி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரியில் 9-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி நிறுவனர் பிரகாஷ் ராஜ்குமார் தலைமை தாங்கினார். கல்லூரி தாளாளர் வக்கீல் ராஜரத்தினம் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் அருண்மொழி செல்வி ஆண்டறிக்கை வாசித்தார்.

    இதில் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்ட கனிமொழி எம்.பி. 200க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பட்டம் பெறும் நாள் என்பது ஒவ்வொரு மாணவ- மாணவியருக்கும் வாழ்க்கையில் மிக முக்கியமான மகிழ்ச்சி தரக்கூடிய கனவுகள் விரிந்து நிற்க கூடிய நாளாகும். கோவிட் என்ற மிகப் பெரிய சிக்கலை கடந்து நிற்க கூடிய தலைமுறையை சேர்ந்தவர்கள் நீங்கள்.

    கொரோனா என்ற சூழ்நிலையில் கல்லூரிக்கு வரமுடியாமல் ஆசிரியர்களை நேரில் சந்திக்க முடியாமல் கல்வி பயின்று பட்டதாரிகளாக வெற்றி பெற்றுள்ளீர்கள். இதை தாண்டி வந்த உங்களுக்கு உலகத்தில் சாதிக்க முடியாதது என்று ஒன்றும் இல்லை. இன்றைய உலகில் நீங்கள் இருக்கிற துறையில் தான் பணிபுரிய வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. உலகம் என்பது மாறி கொண்டே இருக்க கூடிய ஒரு விஷயம்.

    ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸில் இருந்து தொடங்கி பல்வேறு புதிய விஷயங்கள் தினம் தினம் உருவாகி கொண்டே இருக்க கூடிய உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இன்று இருக்க கூடிய டெக்னாலஜி இன்னும் 2 வாரத்தில் காணாமல் போய்விடுகிறது.

    காலம் மாறிக் கொண்டு இருக்க கூடிய சூழ்நிலையில் உங்களுடைய அறிவாற்றல்தான் இன்றைக்கு உங்களுக்கு மிக பெரிய சக்தி. நீங்கள் இருக்க கூடிய துறையில் மட்டுமில்லாது உங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதுதான் உங்களுக்கு வெற்றிகளை கொண்டு வந்து குவிக்கும். எனவே மாணவர்கள் தங்கள் அறிவாற்றலை எல்லா துறைகளிலும் மேம்படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.


    ×