search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Highspeed"

    • கூட்டத்தில் மன்ற பொருள் படிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    • புதிய பஸ் நிலைத்திற்குள் உள்ளே வரும் பஸ்கள் மிக வேகமாக வருவதால் காத்திருக்கும் பயணிகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.

     அவினாசி

    அவினாசி பேரூராட்சி கூட்டம் தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு செயல் அலுவலர் ராமலிங்கம், துணைத் தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மன்ற பொருள் படிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசியதாவது:-

    கோபாலகிருஷ்ணன் (16-வது வார்டு):-

    அவினாசி பு பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். வார்டு பகுதியில் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்ய வேண்டும். அவினாசி முழுவதும் உள்ள ரோடு ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று பல கூட்டங்களில் வலியுறுத்தியும் பயனில்லை. பேரூராட்சி பகுதியில் நடைபெறும் வேலைகளை அதிகாரிகள் ஆய்வு செய்வதே கிடையாது.

    தங்க வேல் (3-வது வார்டு):-

    மாகாளியம்மன் கோவில் அருகில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மிகவும் இடையூறு ஏற்படுகிறது. எனவே அங்கு மண்கொட்டி அந்த இடத்தை சமன்படுத்த வேண்டும்.

    கார்த்திகேயன் (11-வது வார்டு):-

    சங்கமாங்குளம் வீதியில் பள்ளி, குடியிருப்புகள் நிறைய உள்ளது. இங்கு சாக்கடை கால்வாய் இல்லாமல் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே அங்கு வடிகால் அமைக்க வேண்டும். புதிய பஸ் நிலைத்திற்குள் வரும் பஸ்கள் மிக வேகமாக வருகின்றன. இதனால் அங்கு காத்திருக்கும் பஸ் பயணிகள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. எனவே பஸ் நிலைய நுழைவு வாயிலில் வேகத்தடை அமைக்க வேண்டும்.தலைவர்: வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாக்கடை கால்வாய் அமைக்கப்படும்.

    பருக்கதுல்லா (15-வது வார்டு):-

    அவினாசி பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிவதால் ஆடு, கோழிகளை கடிப்பதுடன் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது.எனவே தெருநாய்களை பிடிக்க வேண்டும்.சுகாதார ஆய்வாளர் :தெருநாய்களை பிடிக்க அதற்கு வண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வந்தவுடன பிடிக்கப்படும்.

    இவ்வாறு வார்டு உறுப்பினர்கள் பேசினர்.

    ×