search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Head Coach Job"

    • ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது.
    • ரிக்கி பாண்டிங் அல்லது பிளமிங் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. இதனால் ராகுல் டிராவிட்டின் தலைமை பயிற்சியாளர் பதவி ஜூன் மாதத்திற்குப் பிறகு நீட்டிக்கப்படாது என்பது உறுதியாகியுள்ளது.

    ராகுல் டிராவிட் மீண்டும் விண்ணப்பம் செய்ய விரும்பவில்லை. சில முன்னாள் வீரர்கள் அவரை வலியுறுத்திய போதிலும் மறுத்து விட்டார்.

    விவிஎஸ் லட்சுமண் இந்திய அணியில் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இல்லாதபோது பயிற்சியாளராக செயல்பட்டார். மேலும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக உள்ளார். இதனால் விவிஎஸ் லட்சுமண் விண்ணப்பம் செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் விவிஎஸ் லட்சுமணும் விண்ணப்பிக்க விரும்பவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் ஆகியோரில் ஒருவர் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பிளமிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராகவும், ரிக்கி பாண்டிங் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராகவும் உள்ளார்.

    ×