என் மலர்

  நீங்கள் தேடியது "harassment torture"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதுக்கடை அருகே வீட்டில் தனியாக இருந்த பட்டதாரி பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த பக்கத்து வீட்டு வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

  நாகர்கோவில்:

  புதுக்கடை அருகே உள்ள கிள்ளியூர் வாழபழஞ்சிவிளையைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 34). இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.

  இவரது பக்கத்து வீட்டில் 22 வயது இளம்பெண் வசிக்கிறார். எம்.ஏ. பட்டதாரியான இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை. நேற்று இவரது பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் இளம்பெண் மட்டும் தனியாக இருந்தார்.

  அப்போது ராஜேஷ் அந்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்தார். திடீரென அவர் இளம்பெண்ணை கட்டிப்பிடித்து செக்ஸ் தொல்லை கொடுத்தார். இதனால் இளம்பெண் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். உடனே ராஜேஷ் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

  இளம்பெண்ணின் சத்தம் கேட்டு அந்த பகுதியினர் அங்கு கூடினர். ராஜேசின் செயல், அந்த பெண்ணுக்கு வேதனையை ஏற்படுத்தியது. இதனால் மனம் உடைந்த பெண், உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறும் இளம்பெண்ணிடம் நாகர்கோவில் மாஜிஸ்திரேட்டு வாக்குமூலம் பெற்றார். அவரிடம் அந்த பெண் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

  எனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராஜேஷ் எனக்கு அண்ணன் முறையாவார். நேற்று எனது பெற்றோர் வேலைக்கு சென்ற பிறகு வீட்டுக்கு வந்தார். சுத்தியல் வேண்டும் என என்னிடம் கேட்டார். எனது வீட்டில் டி.வி. சரியாக தெரியாததால் அதனை சரி செய்து தரும்படி அவரிடம் கூறினேன். அப்போது திடீரென அவர் என் மீது பாய்ந்து எனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தார். இதனால் ஏற்பட்ட மனவேதனையில் நான் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றேன்.

  இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.

  அதன்பேரில் புதுக்கடை போலீசார் ராஜேஷ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

  ×