என் மலர்
நீங்கள் தேடியது "Gundartai Doorway"
- ராமநாதபுரம் மாவட்டத்தில் மலட்டாறு-குண்டாற்றை தூர்வார பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
- அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பறையன்குளம் கிராமத்தில் உள்ள மலட்டாறு அணை கட்டு கால்வாயிலிருந்து பிரியும் சங்கரத்தேவன் கால்வாயை தூர்வாருவது தொடர்பாக தன்னார் வலர்கள், ஆப்பநாடு இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் சபை மற்றும் மெகா பவுண்டேசன் சார்பா க முடிவு செய்யப் பட்டது. முன்னதாக விவசாயிகளுக்கு தண்ணீ ரின் தேவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. இதற்கு பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் ஆதரவு கிடைத்த பிறகு நீர்நிலைகளை தூர்வார ஆப்பநாடு இளைஞர்கள் மற்றும் விவசாய சபை சார்பில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து சங்கரத்தேவன் கால்வாய்க ளை தூர்வருவது தொடர்பாக உடனடியாக மாவட்ட கலெக்டர் பொது பணி துறைக்கு பரிந்துரை செய்தார். இதேபோல் முதுகுளத்தூர் குண்டாற்ைற தூர்வாருவது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது.
மேலும் நீர்நிலைகளை சீரமைக்க மதுரை பொதுப்பணித்துறை அலுவலத்தில் நிர்வாக பொறியாளரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.
பலகட்ட போராட் டத்திற்கு பிறகு ஆப்பநாடு இளைஞர்கள் மற்றும் விவசாய சபை, தன்னார்வ லர்கள் கோரிக்கையை பரிசீலனை செய்த அதிகாரிகள் தலைமை பொ றியாளரின் அறிவுறுத்த லின்படி நிர்வாகப் பொறி யாளர் கலைச்செல்வி, முதுகுளத்தூர் உட்கோட்ட அலுவலர் ஜெயசுதா, உதவி பொறியாளர் தினேஷ் ஆகியோர் தலைமையில் கொண்ட குழுவினர் பறையன்குளம் கிராமத்தில் உள்ள சங்கரத்தேவன் கால்வாயினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து அறிக்கை தலைமை பொறி யாளருக்கு சமர்பிக்கப் பட்டுள்ளது.
தற்போது விவசாயிகள் விவசாய பணிகளை பல கிராமங்களில் தொடங்கி இருப்பதால் கால்வாய்களை தூர்வார அனுமதி கிடைத்தால் பல்வேறு கிராமங்கள் பயனடையும், பல்லாயிரம் ஏக்கர் விவசாயம் செழிப்பாக இருக்கும் எனவும் நீர்வளத்துறை அதிகாரிகள் தாமதம் செய்யாமல் உடனே கால்வாயை தூர்வார அனுமதி கிடைத்தால் உடனே தன்னார்வலர் அமைப்பு களுடன் இணைந்து உடனே பணிகளை ஆரம்பித்து விடுவோம் எனவும் ஆப்பநாடு இளைஞர்கள் மற்றும் விவசாய சபையின் தலைமை ஒருங்கி ணைப்பாளர் மனோஷ் கூறியுள்ளார்.






