search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Green plants"

    • சென்னை மாநகரத்தில் உள்ள மேம்பால தூண்களில் பசுமை செடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
    • செடிகளை பராமரிப்பதற்காக சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டு, மேல்நிலை தொட்டியில் இருந்து குழாய்கள் பொருத்தப்பட்டு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

    நெல்லை:

    சென்னை மாநகரத்தில் உள்ள மேம்பால தூண்களில் பசுமை செடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவது பெரிய அளவில் தடுக்கப்படுகிறது.

    அதேபோல் நெல்லை மாநகரத்தின் மையப்பகுதியில் உள்ள வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் பகுதியில் உள்ள தூண்களில் பசுமை செடிகள் அமைக்க மாநகராட்சி கமிஷன் சிவகிருஷ்ணமூர்த்தி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    இதன் முதல் கட்டமாக தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பசுமை செடிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக மேம்பால தூண்களில் இரும்பு கம்பிகள் அமைக்கப்பட்டு அதில் பசுமை செடிகள் நடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து செடிகளை பராமரிப்பதற்காக சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டு, மேல்நிலை தொட்டியில் இருந்து குழாய்கள் பொருத்தப்பட்டு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

    விரைவில் அனைத்து தூண்களிலும் செடிகள் அமைக்கப்படும் என கமிஷனர் தெரிவித்துள்ளார். இதில் பல்வேறு வகையான மூலிகை செடிகளும் நட்டு பராமரிக்கப்படும் என்றும், வண்ணார்பேட்டை எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக உள்ளதால் சுற்றுச்சூழலை பராமரிக்கும் வண்ணம் பசுமை செடிகள் நடப்பட்டுள்ளதாக கமிஷனர் தெரிவித்துள்ளார். மாநகராட்சி கமிஷனரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    ×