search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "GRAVE DAY"

    • இறந்தவர்களின் ஆத்துமா கர்த்தரிடத்தில் இளைப் பாறுகின்றது.
    • மரித்தவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையில் குடும்பத்தினர் மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி வழிபட்டனர்

    திருப்பூர் :

    சகல ஆத்துமாக்கள் தினத்தை கிறிஸ்தவர்கள் இன்று கல்லறை திருநாளாக அனுசரிக்கிறார்கள். இறந்தவர்களின் ஆத்துமா கர்த்தரிடத்தில் இளைப் பாறுகின்றது.அடிப்படை யில் அவர்களை நினைவு கூறும் வகையில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.மரித்தவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையில் குடும்பத்தினர் மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி வழிபட்டனர்.

    திருப்பூரில் உள்ள கல்லறை தோட்டங்களுக்கு கிறிஸ்தவர்கள் காலையில் இருந்து குடும்பம் குடும்ப மாக வரத் தொடங்கினார் கள்.கார்களிலும், இரு சக்கர வாகனத்திலும் மாலை மற்றும் மலர்களை வாங்கி எடுத்து வந்தனர். இன்று மாலை 3 மணிக்கு பிறகு கூட்டம் அதிகரிக்கும். ஆயிரக்கணக்கான கிறிஸ்த வர்கள் கல்லறை களின் முன்பு சிறிது நேரம் மவுனமாக இருந்து ஜெபித்து சென்றனர். சிறு வர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பமாக வந்தனர்.அனைத்து திருச்சபையை சேர்ந்த கிறிஸ்தவர்களும் தங்களது உறவினர்கள், குடும்ப உறுப்பினர்களை நினைவு கூர்ந்து ஜெபத் துடன் வழி பட்டனர்.ஒரு சில கல்லறை தோட்டங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.  

    • சகல ஆத்துமாக்கள் தினம் என்னும் கல்லறை திருநாள் கிறிஸ்தவர்களால் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது.
    • இதில் திரளான கிறிஸ்தவர்கள் மலர்களை தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் மறைந்த முன்னோர்களின் நினைவுகளை கூர்ந்து அவர்களுக்காக பிரார்த்தனை செய்தனர்.

    திருச்சி,

    சகல ஆத்துமாக்கள் தினம் என்னும் கல்லறை திருநாள் கிறிஸ்தவர்களால் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது. இறந்தவர்களை நினைவு கூறும் வகையில் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    இறந்த முதியவர்கள், முன்னோர்கள் மற்றும் உறவினர்களின் ஆத்துமா இறைவனிடத்தில் இளைப்பாறிக் கொண்டிருக்கும் என்ற விசுவாசத்தின் அடிப்படையில் அவர்களை நினைவு கூறும் வகையில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்வார்கள். இந்த நாளே கல்லறை திருநாள் என்று கிறிஸ்தவர்களால் அழைக் கப்படுகிறது.

    அந்த வகையில் இன்று கல்லறை திருநாள் கடைபிடிக்கப்படு கிறது. முன்னதாக கடந்த 2 நாட்களாக கத்தோலிக்க திருச்சபை, தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ), மெத்தடிஸ்ட், ஆற்காடு லூத்ரன், பெந்தேகோஸ்து, இ.சி.ஐ. உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் கல்லறைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    ஒவ்வொரு திருச்சபை மற்றும் பங்குகளுக்கு சம்பந்தப்பட்ட கல்லறை தோட்டங்களில் உள்ள கல்லறைகளை உறவினர்கள் புணரமைக்கும் பணியினை செய்தனர். அதன்படி இன்று நடந்த கல்லறை திருநாளில் மரித்தவர்களை அடக்கம் செய்த இடத்தில் அவர்களை நினைவு கூர்ந்து ஜெபித்து, மலர் தூவினர். குடும்பம் குடும்பமாக சென்று மாலை அணிவித்தும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர்.

    கிறிஸ்தவ திருச்சபை சார்பில் அங்கு சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டது. ஆயர்கள், பாதிரியார்கள் கல்லறைகளுக்கு சென்று ஜெபம் செய்து பிரார்த்தனைகளை நடத்தினர்.

    திருச்சியில் கல்லறை தினத்தையொட்டி இன்று மேலப்புதூர் மார்சிங்பேட்டை வேர்ஹவுஸ் கல்லறை தோட்டம், ஆண்டாள் வீதி, கோர்ட்டு அருகில் உள்ள கல்லறை தோட்டம், மணல் வாரித்துறை கல்லறை தோட்டம், ஜேம்ஸ் சர்ச் கல்லறை தோட்டம், ஜி கார்னர் கல்லறை தோட்டம், பொன்மலைப்பட்டி உள்ளிட்ட கல்லறை தோட்டங்களில் கல்லறைகள் இன்று சுத்தம் செய்யப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

    இதில் திரளான கிறிஸ்தவர்கள் மலர்களை தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் மறைந்த முன்னோர்களின் நினைவுகளை கூர்ந்து அவர்களுக்காக பிரார்த்தனை செய்தனர்.

    ×