என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "GramaSabha Meetings"

    • வாடியூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    • அச்சங்குட்டம் ஊராட்சி யில் பழனி நாடார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொது மக்களிடையே தேவைகளை கேட்டறிந்தார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் நேற்று மே தின சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது.

    வாடியூர் ஊராட்சி

    ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாடியூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    ஊராட்சி மன்றத் தலைவர் ஸ்நாபக அந்தோணி தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டார். மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் முத்துலெட்சுமி மற்றும் ஒன்றியக் குழு தலைவர் திவ்யா மணி கண்டன் சிறப்பு அழைப் பாளராக கலந்து கொண்டனர்.

    பின்னர் கலெக்டர் மரக்கன்று நட்டார். அதனைத்தொடர்ந்து கிராமசபை கூட்டத்தில் 19 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அதில், "எங்கள் கிராமம் எழில்மிகு கிராமம்" என்ற உறுதிமொழி மற்றும் "பெண் குழந்தை களை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" என்ற உறுதி மொழியும் எடுக்கப்பட்டது.

    கூட்டத்தில் தென்காசி, திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), பிரான்சிஸ் மகாராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் திலகராஜ், விஜயகணபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    சில்லரைப்புரவு ஊராட்சி

    தென்காசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சில்லரைப்புரவு ஊராட்சி யில் உழைப்பாளர் தின சிறப்பு கிராமசபைக்கூட்டம் தலைவர் நா.குமார் தலைமையில் நடைபெற்றது தென்காசி உதவிதிட்ட அலுவலர், (மகளிர் திட்டம்) மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ), வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) ஆகியோரும் துணைத் தலைவர் வெ.முத்துச் செல்வி, உறுப்பினர்கள் தங்க மாரியப்பன், தாமரைச் செல்வன், பார்வதி, கணேசன், மகேஸ்வரி,கிராம நிர்வாக அலுவலர், மற்றும் பல்வேறு துறையைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் செண்பகராஜன் பல்வேறு தீர்மானங்களை வாசித்து நன்றிகூறினார்.

    அச்சங்குட்டம் ஊராட்சி

    அச்சங்குட்டம் ஊராட்சி யில் மே தினம் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவி வெங்கடேஸ்வரி முருகேசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பழனி நாடார் கலந்து கொண்டு பொது மக்களிடையே தேவைகளை கேட்டு கேட்டறிந்தார்.

    இக்கூட்டத்தில் ஊராட்சி செயலர்மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ஆவுடையானூர் ஊராட்சி

    கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் ஆவுடையானூர் ஊராட்சியில் மேதினத்தில் ஊராட்சி மன்ற தலைவர் குத்தாலிங்கராஜன் தலைமையில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் அரசு அதிகாரிகளால் நிறுத்தம் செய்யப்பட்ட 2022-2023ம் ஆண்டின் 15வது நிதிகுழு மானிய நிதியில் நடைபெறும் பணிகளை அதிகாரிகள் நிறுத்தம் செய்ததை கைவிட்டு மீண்டும் அத்திட்டத்தில் பணிகள் தொடர அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்றும் இது தொடர்பாக நடைபெறும் இந்த கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட்கட்சி (மார்க்சிஸ்ட் லெலின்ஸ்ட்) சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    ஊராட்சி பகுதிகளில் இருந்து கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து பொதுமக்களின் முழு ஆதர வுடன் தீர்மானம் உடனடி யாக நிறைவேற்றப்பட்டது. மேலும் தீர்மானம் நிறை வேற்றிட உறுதுணையாக இருந்த அனைத்து பொது மக்களுக்கும் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் முருகன் நன்றியை தெரிவித்தார்.

    ×