search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government Music School"

    • தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 2023-24-ம் ஆண்டுக்கான மாணவ-மாணவிகள் சேர்க்கை வருகிற 2-ந் தேதி தொடங்குகிறது.
    • இந்த பள்ளியில் சேருவதற்கு 12 வயதுக்கு மேல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்ப தாவது:-

    மாணவர் சேர்க்கை

    தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 2023-24-ம் ஆண்டுக்கான மாணவ-மாணவிகள் சேர்க்கை வருகிற 2-ந் தேதி தொடங்குகிறது. இந்த பள்ளியில் சேருவதற்கு 12 வயதுக்கு மேல் 25 வயது க்குள் இருக்க வேண்டும்.

    குரலிசை, பரதநாட்டியம், தேவாரம், வயலின், மிருதங்கம் ஆகிய கலை களுக்கு 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தவில், நாதசுரம் ஆகிய கலைகளுக்கு எழுதப் படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.

    இசைப்பள்ளி படிப்பின் கால அளவு மூன்று ஆண்டுகள் ஆகும். இசைப்பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர் களுக்கும் மாதந்தோறும் ரூ.400 கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

    அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் அரசு விடுதி வசதியும் செய்து தரப்படும். வெளி யிடங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு இலவச பஸ் கட்டண வசதியும் செய்து தரப்படும்.

    வேலைவாய்ப்பு மூன்று ஆண்டுகள் படித்து அரசுத்தேர்வுகள் இயக்ககம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் கர்நாடக இசைக் கச்சேரிகள் நடத்தவும், நாதசுரம் மற்றும் தவில் வாசித்து தொழில் புரியவும், தேவாரம் பாடுதல் மற்றும் கோவில் களில் பணிபுரியவும், வானொலி மற்றும் தொலைக் காட்சிகளில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சி களில் பங்குபெற்று திறமை களை வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளன.

    கோவில்களில் தேவார ஓதுவார் பணியில் சேர்ந்திட இந்த பள்ளியில் தேவார இசை படித்து தேர்ச்சி பெற்ற மாணவ -மாணவி களுக்கு முன்னுரிமை அளித்து வேலைவாய்ப்பு வழங்க அரசு ஆணையிட்டு உள்ளது.

    இந்த ஆண்டு முதல் இசை ஆசிரியர் களுக்கான வளாக நேர்காணல் நடத்தப்பட்டு வேைல வாய்ப்பு பெற நடவடி க்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    எனவே கலை ஆர்வம் உள்ள மாணவ-மாணவிகள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு இசைப் பள்ளி தலைமை ஆசிரியை, தூத்துக்குடி-2 என்ற முகவரியிலும், 9487739296 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×