search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "goat meat"

    • தீபாவளி பண்டிகையையொட்டி தரமற்ற, சுகாதாரமற்ற ஆட்டு இறைச்சி விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.
    • சுகாதாரமற்ற ஆட்டு இறைச்சி விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் 94440 42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் புகார் அளிக்கலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மக்களின் அன்றாட தேவைகளில் அவசியமானதாக விளங்கும் உணவு மற்றும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்ய, தீபாவளி பண்டிகையையொட்டி ஆட்டு இறைச்சி வியாபாரம் செய்யும் அனைத்து வணிகா்களும் உரிய உரிமம், பதிவு சான்று பெற்றிருக்க வேண்டும்.

    ஆடு வதை செய்யும் இடங்களுக்கு போதிய அளவு தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். நோயுற்ற ஆடுகளை வதை செய்து விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும். சுகாதாரமான முறையில் ஆட்டு இறைச்சி விற்பனை செய்யும் இடத்தை பராமரிக்க வேண்டும்.

    பணிபுரியும் பணியா ளா்கள் மருத்துவ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பணியாளா்கள் முகக்கவசம் அணிந்து பணிபுரிய வேண்டும். ஆட்டு இறைச்சியை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.

    பதிவு பெற்ற ஆட்டு இறைச்சி கடைகளில் மட்டுமே பொதுமக்கள் ஆட்டு இறைச்சியை வாங்க வேண்டும். ஆட்டு இறைச்சி வாங்கும்போது சில்வா் பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். தரமற்ற மற்றும் சுகாதாரமற்ற ஆட்டு இறைச்சி விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் 94440 42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் புகார் அளிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×