என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "General Law Entrance Exam"

    • தேர்வை எழுத மாணவர்கள் வெள்ளத்தை தாண்டியும் புதுவை வந்தனர்.
    • 250 பேரில் 200 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் மழை கொட்டிய சூழலில் நகரெங்கும் சாலைகளில் வாகனங்களை ஓட்டி செல்வதே சவாலாக உள்ளது.

    அதே நேரத்தில் தேசிய சட்டக்கல்லூரிகளில் சேர பொது சட்ட நுழைவுத் தேர்வான கிளாட் நேற்று நாடு முழுவதும் நடந்தது. இந்த தேர்வுக்கான மையம் புதுச்சேரி சட்டக்கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்தது.

    புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மட்டுமில்லாது பல மாவட்ட மாணவர்கள் புதுச்சேரி மையத்தை தேர்வு செய்திருந்தனர். தேர்வை எழுத மாணவர்கள் வெள்ளத்தை தாண்டியும் புதுவை வந்தனர்.

    புதுச்சேரியில் தேர்வு எழுத 250 பேர் வரை ஹால்டிக்கெட் அனுப்பப்பட்டிருந்தது. இதில் 200 மாணவர்கள். தேர்வு எழுதினர். மாணவர்களுடன் பெற்றோர்களும் வந்திருந்தனர். பெற்றோர்கள் அமர தேர்வு மையத்தில் அறை வசதியை சட்டக் கல்லூரி நிர்வாகம் செய்திருந்தது.

    ×