என் மலர்

  நீங்கள் தேடியது "gas plant"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒரு சிலிண்டர் திடீரென வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் 3 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
  • வெடிவிபத்து குறித்து விசாரிக்க சண்டிகரில் இருந்து தடயவியல் குழு வரவழைக்கப்பட்டுள்ளது.

  பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் பகுதியில் உள்ள தனியார் எரிவாயு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று திரவ நைட்ஜரன் அரிவாயு உருளையை நிரப்பும்போது வெடி விபத்து ஏற்பட்டது. இதில், புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்ததாகவும், மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

  இதுகுறித்து ஹோஷியார்பூர் காவல் கண்காணிப்பாளர் (விசாரணை) மன்பிரீத் சிங் தில்லான் கூறுகையில், "தியோவல் கிராமத்தில் உள்ள ஆலையில் சில தொழிலாளர்கள் திரவ நைட்ரஜன் வாயுவை சிலிண்டர்களில் நிரப்பியபோது வெடித்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

  அதில் ஒரு சிலிண்டர் திடீரென வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் 3 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

  வெடிவிபத்து குறித்து விசாரிக்க சண்டிகரில் இருந்து தடயவியல் குழு வரவழைக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

  ×