என் மலர்
நீங்கள் தேடியது "Garbage Collection Bins"
- நகர்மன்ற உறுப்பினா் பொன்னுலிங்கம் தனது சொந்த செலவில் 12 குப்பை சேகரிப்பு தொட்டிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி தலைமை தாங்கினார்.
செங்கோட்டை:
செங்கோட்டை நகராட்சி மேலுார் 14-வது வார்டு பகுதிகளில் ரோட்டோரம் குப்பைகளை கொட்டுவதை தடுக்கும் வகையில் அந்த வார்டு நகர்மன்ற உறுப்பினா் பொன்னுலிங்கம் தனது சொந்த செலவில் 12 குப்பை சேகரிப்பு தொட்டிகளை தனது வார்டு பகுதிகளில் உள்ள அனைத்து தெருக்களிலும் நிறுவி பொதுமக்கள் பயன் பாட்டிற்கு தொடங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி தலைமை தாங்கினார். சுகாதார அலுவலா் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளா் பழனிச்சாமி, செங்கோட்டை ரெயில் பயணிகள் நலச்சங்க தலைவா் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனா். 14-வது வார்டு நகர்மன்ற உறுப்பினா் பொன்னுலிங்கம் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் நகராட்சி பணியா ளா்கள், சுகாதார மேற்பார்வையா ளா்கள் முத்து மாணிக்கம், காளியப்பன் பொதுமக்கள், சமூக ஆர்வலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.






