என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gang abducted"

    • மனோகரனை கடத்த வேண்டியவர் இல்லை என தெரிந்ததும் இறக்கி விட்டு தப்பினர்.
    • மனோகரன் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.

    கோவை,

    கோவை பீளமேடு ஜி.வி.ரெசிடென்சியை சேர்ந்தவர் மனோகரன்(வயது67). மார்க்கெட்டிங் தொழில் செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு இவர் திருச்சி ரோடு நஞ்சப்பா நகர் அருகே நின்றிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் முதியவரை காரில் தூக்கி போட்டு கடத்தி சென்றனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். எதற்காக என்னை கடத்தினீர்கள் என கேட்டார். அப்போது அந்த கும்பல் மனோகரனிடம் உன் பெயர் கந்தசாமிதானே என கேட்டனர்.

    அவர் இல்லை என்று சொல்லியும் நம்பாத அந்த கும்பல் அவரது ஆதார் கார்டை வாங்கி பார்த்தனர். அதில் மனோகரன் என இருந்தது. இதனால் அந்த கும்பல் அவரை எல்அண்டி பைபாசில் உள்ள கல்லூரி அருகே இறக்கி விட்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து மனோகரன் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் நடத்திய விசாரணையில், கந்தசாமி என்பவருக்கு பதிலாக மனோகரனை அந்த கும்பல் கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து கந்தசாமி என்பவர் யார்? அவரை அந்த கும்பல் கடத்த வந்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஆளை மாற்றி முதியவரை காரில் கடத்தி சென்று பின்னர் இறக்கி விட்டு சென்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×